கடைசி நேரத்தில் வாயை கொடுத்து வம்புல மாட்டிக்கிட்ட சிவாஜி!.. நடிகர் சங்க பிரச்சினைக்கு மூல காரணமே இதுதானாம்..
இப்பொழுது தமிழ் நடிகர்களுக்கு தலையாய பிரச்சினையாக இருப்பது நடிகர் சங்க கட்டிடத்தை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்பது தான். அந்த கட்டிடத்தை கட்டி முடித்தால் தான் எனது திருமணம் நடக்கும் என கிட்டத்தட்ட 40 வயதை கடந்த விஷால் கம்பீரமாக இருக்கிறார். அதற்கான முயற்சியில் நாசர், கார்த்தி, விஷால் மும்முரமாக போராடி வருகின்றனர்.
மேலும் இந்த நடிகர் சங்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி போன்றோரும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். கடன் சுமையில் தத்தளித்து வந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததே விஜயகாந்த் தான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்த பிரச்சினை காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது.
1952ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குனர் கே.சுப்பிரமணியம் நடிகர்களுக்கான துணை நடிகர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார். அப்போது சங்கத்தின் தலைவராக டிபி.சுந்தரம் என்பவரை சுப்பிரமணியம் நியமித்திருந்தார். மேலும் அந்த சங்கத்தின் உறுப்பினர்களாக எம்ஜிஆர், சிவதாணு, சகஷ்ரநாமம் போன்றோர் இருந்தனர்.
பின்னாளில் எம்ஜிஆரால் துணை நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான விதிகளையும் விதித்திருக்கிறார் எம்ஜிஆர். எப்படியோ சங்கத்தை நிறுவிய எம்ஜிஆர் அதற்கான கட்டிடத்தை கட்ட போதுமான நிதி இல்லாததால் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.வாசன், ஏவிஎம் ஆகியோரின் உதவியால் அபிபுல்லா சாலையில் ஒரு இடத்தை வாங்கியிருக்கிறார்கள்.
ஆனால் மேற்கொண்டு கட்டிடத்தை கட்ட வழியில்லாமல் திகைத்து நிற்க அந்த சமயத்தில் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை உருவாக்கி ஒரு வழியாக தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அப்போழுது எம்ஜிஆர் வி.கே.ராமசாமியையும் அவரது நண்பர் ஒருவரையும் வரவழைத்து எப்படியாவது அந்த கட்டிடத்தை கட்டியாக வேண்டும். தம்பி சிவாஜியை சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்க சொல்லுங்கள் என்று வி.கே.ராமசாமியிடம் சொல்லி அனுப்பினார் எம்ஜிஆர்.
ஆனால் சிவாஜி கட்டிடத்தை கட்ட வேண்டுமென்றால் லோன் போட வேண்டும், சங்கத்திற்கு தகுதியான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையெல்லாவற்றிற்கும் மேலாக அந்த லோன் கடன் அடையும் வரை நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வைக்க கூடாது. இதற்கு சம்மதம் தெரிவித்தால் நான் தலைவராக பொறுப்பேற்கிறேன் என்று சிவாஜி சொல்ல எம்ஜிஆரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
தலைவராக சிவாஜி, பொருளாளராக வி.கே.ராமசாமி, செயலாளராக மேஜர் சுந்தராஜன் தலைமையில் சுமார் 22லட்சம் செலவில் கட்டிடம் உருவாக எம்ஜிஆர் கட்டிடத்தை திறந்து வைத்தார். எனினும் அந்த கடனை அடைக்க போராடி வந்ததை ராமசாமி எம்ஜிஆரிடம் சொல்ல அதற்கு நான்கு முக்கிய நகரங்களில் முதலமைச்சரின் நிதியை முன்னிறுத்தி கலைவிழா நடத்துங்கள். வரக்கூடிய வருவாயையும் சேர்த்து அந்த கடனை அடைத்து விடலாம் என்று எம்ஜிஆர் கூறினார்.
ஆனாலும் கடன் அடையவில்லை. அதற்கு காரணம் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான். ஏனெனில் கலையுலகில் இருவரும் ஒன்றாக இருந்தாலும் அரசியலில் இருவரும் வெவ்வேறு கட்சியை சார்ந்தவர்களாக இருந்ததால் எம்ஜிஆரை பற்றி சிவாஜி கடுமையாக விமர்சித்து பேசவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் சிவாஜியின் அந்த பேச்சை எம்ஜிஆர் ரசிக்கும் படியாக அமையவில்லை. அதனாலேயே கட்டிட பிரச்சினை அப்படியே நின்று போனது. சங்கத்தின் உறுப்பினர்களும் அவர்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் அந்த கருத்து வேறுபாடு மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று நடிகர் சங்கம் அனுபவிக்கும் பிரச்சினை கண்டிப்பாக வந்திருக்காது என்று இந்த பதிவை கூறிய பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.