வாய் விட்டு அஜித் பட வாய்ப்பை பறிகொடுத்த ஹிட் பட இயக்குனர்...வட போச்சே!....
ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எப்போதும் தாங்கள் நடிக்கவுள்ள படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எங்கேயும் அதுபற்றி பேசமட்டார்கள். அதேபோல், அப்படம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களும் இதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது என நினைப்பார்கள். ஆனால், சில சமயம் இதை வெளியே கூறி ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பை இயக்குனர்கள் தவற விடுவார்கள்.
விஷால், அர்ஜூன், சமந்தா ஆகியோர் நடித்து வெளியாகி ஹிட் அடித்த இரும்புத்திரை திரைப்படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தை இயக்கியிருந்தார். தற்போது கார்த்தியை வைத்து ‘சர்தார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்புத்திரை படத்திற்கு பின் அஜித்தை சந்தித்து மித்ரன் ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை அஜித்துக்கும் பிடித்துப்போயிட ஓகே சொல்லிவிட்டாராம். அது நடந்து சில நாட்களில் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் ‘அஜித்தை அடுத்து இயக்கவுள்ளேன்’ என மித்ரன் கூறிவிட, கடுப்பான அஜித் மித்ரனை கழட்டிவிட்டாராம்.
இப்படி வளரும் இயக்குனர்கள் பலர் பெரிய நடிகர்களின் வாய்ப்பை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.