More
Categories: Cinema History Cinema News latest news

தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜபாகவதர் ஒரு சிம்மசொப்பனம்

அந்தக்காலத்தில் ரசிகர்கள் மத்தியில் இவரது ஹேர் ஸ்டைல் தான் பிரபலம். அனைவரும் பாகவதர் ஹேர் ஸ்டைலில் தான் இருந்தனர். ஸ்ரீகிருஷ்ணா முகுந்தா முராரே என்ற பாடலைக் கேட்டால் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் பாகவதர் தான். இவர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைக் காணலாம்.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் முதல் சூப்பர்ஸ்டார் யாரென்றால் சிறு குழந்தை கூடசொல்லும் எம்.கே.தியாகராஜபாகவதர் என்று. ஏழிசை மன்னர் யாரென்றால் அதுவும் இவர் தான். தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர் சூப்பர் ஸ்டார் தான். இவர் பொது இடங்களுக்கு வந்து விட்டால் போதும். கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிவிடும்.

Advertising
Advertising

ஒரு நடிகர் என்றால் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அத்தனை தகுதியும் இவருக்கு உள்ளது. அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு நடிக்க மட்டும் தெரிந்தால் போதாது. திறம்பட பாடவும் வேண்டும். அந்தத் திறமை எம்.கே.டி.க்கு இருந்தது. 1934ல் வெளியான பவளக்கொடி படத்தில் அறிமுகமான இவர் 14 திரைப்படங்களில் நடித்தார். அவற்றில் 6 மெகாஹிட்டானது.

mkt

இவரது நடிப்பில் வெளியான அரிதாஸ் படம் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஓடி புதிய சரித்திரம் படைத்தது. 3 தீபாவளிகள் தொடர்ந்து ஓடிய ஒரே இந்தியப்படமும் இதுதான். நாலரைக் கட்டை சுருதியில் பாடி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். இவருக்கு ஏழை, பணக்காரன் என்று பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இருந்தனர்.

பாபநாசம் சிவன் எழுதிய பல பாடல்களை எம்கே.தியாகராஜபாகவதர் தான் பாடி அசத்தினார். இவர் தான் சாப்பிடும் தங்கத்தட்டில் தான் உடன் வருபவர்களுக்கும் விருந்தளிப்பார். சிறந்த தொண்டுள்ளம் படைத்தவர். பாபநாசம் சிவன் கஷ்டப்பட்ட காலத்தில் தான் சாப்பிட்ட தங்கத்தட்டையே அவருக்குப் பரிசாகக் கொடுத்தார்.

தன்னை நாடி வருபவர்களுக்கு இல்லை என்று இவர் ஒருபோதும் சொல்வதில்லை. ஒருமுறை இவரது வைர மோதிரம் ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது. யாரும் எதிர்பாராத நேரத்தில் உயிரைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவரது ரசிகன் எம்.கே.டி. கோபால் கிணற்றில் குதித்து அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். சிறந்த தயாள குணம் கொண்டவர் எம்.கே.தியாகராஜபாகவதர்.

அதேபோல் தனது வழக்கை திறம்பட தீர்த்து வைத்த தனது வழக்கறிஞர் வேலூர் எத்திராஜ் முதலியாருக்கு தங்கத்தட்டை பரிசாகக் கொடுத்தார். பின்னாளில் அந்தத் தங்கத்தட்டையும், தன்னிடம் இருந்த சிறு பணத்தையும் கொண்டு அவர் சென்னையில் எத்திராஜ மகளிர்

mkt in haridass

கல்லூரியைத் தொடங்கினார்.

இவரது ரசிகர் ஒருவர் மண்டைக்காடு என்ற இடத்தில் பாகவதர் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார். இலவசம் என்ற இந்தக்கச்சேரிக்கு விளம்பரம் செய்யப்பட்டது. கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது நிர்வாகிகள் பணம் வசூலிக்கலாம் என்றனர். அப்போதும் பாகவதர் இலவசம் என்று அறிவித்து விட்ட கச்சேரிக்கு பணம் வாங்க மறுத்து விட்டார்.

நாகர்கோவிலில் கலைவாணர் வீட்டில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் பாகவதர் கச்சேரி நடத்தினார். அப்போது கலைவாணர் பாகவதருக்கு வைர மோதிரம் பரிசாக வழங்கினார். பாகவதரோ கச்சேரியில் சிறப்பாக வயலின் வாசித்த வித்வானுக்கு அந்த பரிசான வைர மோதிரத்தை வழங்கி விட்டார்;.

1957ல் இந்தியாவின் பிரதமராக நேரு இருந்தார். அப்போது தமிழக முதல்வர் காமராஜருடன் திருச்சி வந்தார். அங்கு பாகவதருக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். உடனே அவரை தேர்தலில் எம்.பி.க்கு நிற்கச் சொன்னார். தான் ஒரு நடிகர். அதை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டார் பாகவதர்.

Published by
sankaran v