இவர் முதல் சூப்பர்ஸ்டார் என்றால் இவர் முதல் தசாவதானி - யார் அந்த இருதுருவங்கள்? !

by sankaran v |   ( Updated:2022-05-24 18:42:53  )
இவர் முதல் சூப்பர்ஸ்டார் என்றால் இவர் முதல் தசாவதானி - யார் அந்த இருதுருவங்கள்? !
X

தமிழ்சினிமாவின் தொடக்கக்காலத்தில் இருந்தே இரு துருவங்களுக்கு இடையே போட்டிகள் அரங்கேறியதுண்டு. ஒரு நாணயத்தில் இரு துருவங்கள் போல தான் இந்தப் போட்டியும். பூவா தலையா என்றால் தெரியாது.

போட்டுப் பார்த்தால் தான் தெரியும் என்பதற்கேற்ப கமல்-ரஜினி, எம்ஜிஆர்-சிவாஜிக்கு முன் முதலில் இருந்த இரு துருவங்கள் தான் எம்கேடி - பியு.சின்னப்பா. இவர்கள் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது. அதைப்பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

மாயவரம் (இப்போது மயிலாடுதுறை) கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் என்ற பெயரின் சுருக்கமே எம்.கே.டி. இவர் 1.3.1910ல் பிறந்தார். 1934ல் காலூன்றிய இவருக்கு அறிமுக படம் பவளக்கொடி. 1944ல் வெளியான இவரது ஹரிதாஸ் படம் 3 தீபாவளிகளைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

Haridass

சிவகவி மற்றும் அம்பிகாவதி படங்கள் இவரது ரசிகர்களிடையே எழுச்சியை உண்டாக்கியது. அசோக்குமார், சியாமளா, அமரகவி, திருநீலகண்டர் ஆகிய படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இவரது கடைசி படம் சிவகாமி. 1959ல் உடல்நலக்குறைவால் காலமானார்.

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா என்ற பெயரின் சுருக்கமே பி.யு.சின்னப்பா. 5.5.1916ல் புதுக்கோட்டையில் பிறந்தார். சிறுவயதிலேயே இசை ஆர்வம் இருந்ததால் பாடுவதில் தேர்ச்சி பெற்றார். சிலம்பம், மல்யுத்தம், குஸ்தி என அனைத்துக்கலைகளிலும் தேர்ந்தவர்.

இவரது இயற்பெயர் சின்னச்சாமி. இவர் முதலில் நடித்த படம் சவுக்கடி சந்திரகாந்தா. 1940ல் உத்தமபுத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். தமிழ்சினிமாவில் முதன்முதலில் இரட்டை வேடம் போட்டு நடித்து பெயர் வாங்கிய நடிகர் இவர் தான். 1942ல் மனோன்மணி மாபெரும் பெற்றி பெற்றது.

PU chinnappa in Uthamaputhiran

1944ல் பிருத்விராஜ் படமும், தொடர்ந்து வெளியான ஜகதலப்பிரதாபனும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. மங்கையர்க்கரசி என்ற படத்தில் அப்போதே 3 வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

கடைசியாக இவர் நடித்த படம் சுதர்சன். ஆனால் இந்தப்படம் அவர் இருக்கும்போது வெளிவரவில்லை. அவர் இறந்தபின் வெளியானது. அப்படி என்றால் அவர் இறப்பதற்கு முன் வெளியான கடைசி படம் எது என்ற கேள்வி எழும். அது தான் வனசுந்தரி. தனது 35வது வயதில் காலமானார்.

எம்கேடி - பியு சின்னப்பா இருவருமே பாடுவதில் வல்லவர்கள். சங்கீதம் தெரிந்தவர்கள். அதனால் இவர்களது படத்தைப் பார்க்கப் போனால் எப்போ பார்த்தாலும் பாடலாகவே இருக்கும்.

PU chinnappa

கிட்டத்தட்ட ஒரு படத்தில் குறைந்தபட்சம் 30 பாடல்களாவது இருக்கும். 1941ல் வெளியான ஆர்யமாலா படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. 1944ல் மட்டும் அரிச்சந்திரா, ஜகதலபிரதாபன், மகாமாயா என்ற 3 படங்கள் வெளியானது. இந்தப்படங்களின் வெற்றியை அப்போது வெளியான எம்கேடியின் ஹரிதாஸ் என்ற ஒரே படம் முறியடித்தது.

தமிழகத்தின் முதல் சூப்பர்ஸ்டார் எம்கேடி என்றால் 2ம் சூப்பர்ஸ்டார் பியு.சின்னப்பா. இவர் அப்போதே 10 வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைத்தார். அது சரி. பியு சின்னப்பா பத்து வேடங்களில் நடித்த படம் எது? என்ற கேள்வி எழலாம். ஆர்யமாலா என்ற படத்தில் தான் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.

Next Story