Connect with us
Ratha Kanneer

Cinema History

ரத்தக்கண்ணீர் கெட்டப்பில் இருந்த எம்.ஆர்.ராதாவை எட்டி உதைக்க தயங்கிய நடிகை… ஓஹோ இதுதான் விஷயமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே ஈடுகொடுக்கும் நடிகராக திகழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. அவரது ஆளுமையை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. எம்.ஆர்.ராதா தொடக்கத்தில் நாடக சபாக்களில் பல நாடகங்களில் நடித்து வந்தார். நாடகத்துறையில் மிகவும் கோலோச்சிய நடிகராக வலம் வந்தார். அதனை தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் சினிமா கலை மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியபோது சினிமாத்துறையிலும் கோலோச்சத் தொடங்கினார்.

எம்.ஆர்.ராதா தனது வாழ்க்கையில் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் “ரத்தக்கண்ணீர்” படத்தின் மோகன் கதாப்பாத்திரம் இப்போதும் பேசப்பட்டு வரும் கதாப்பாத்திரமாக இருக்கிறது. தொழுநோய் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் எம்.ஆர்.ராதா. அதே போல் இத்திரைப்படத்தில் அவர் பேசும் சமூக கருத்துக்கள் பலவும் பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.

Ratha Kanneer

Ratha Kanneer

 

எத்தி உதைக்க மறுத்த நடிகை

இந்த நிலையில் “ரத்தக்கண்ணீர்” திரைப்படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் காந்தா என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் எம்.என்.ராஜம் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவை, எம்.என்.ராஜம் தனது காலால் எத்தி உதைப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.

அந்த காட்சி படமாக்கப்பட்ட போது முதலில் இந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம் எம்.என்.ராஜம். அதாவது “எம்.ஆர்.ராதா மிக புகழ் பெற்ற நடிகர். இவரை நான் எப்படி எத்துவது போல் நடிக்க முடியும்” என கூறி அந்த காட்சியில் நடிக்க மறுத்தாராம். இத்திரைப்படத்தின் இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு, எம்.ஆர்.ராதாவிடம் இந்த விஷயத்தை கூறினார்கள்.

MN Rajam

MN Rajam

அதன் பின் எம்.ஆர்.ராதாவே எம்.என்.ராஜமிடம் சென்று, தன்னை எத்தி உதைக்கும்படி கூறினார். ஆனால் அப்போது அவர் மறுத்துவிட்டார், அதனை தொடர்ந்து இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு, எம்.என்.ராஜனிடம் சென்று, “நீங்கள் இந்த படம் முழுவதும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறீர்கள். ஆனால் இவ்வளவு நடிச்சும் என்ன பிரயோஜனம். இந்த காட்சியில் நீங்கள் நடிக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த படத்தை விட்டு உங்களை நீக்கிவிடுவோம். இந்த படத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது எல்லாம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனால் நீங்கள் சிந்தித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்களாம். அதன் பிறகுதான் எம்.என்.ராஜம் அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top