பள்ளி மாணவியாக பிரபல நடிகை.. ஸ்கூல் யூனிபார்மில் வெளியிட்ட வைரல் BTS ஃபோட்டோஸ்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா.
தெலுங்கில், 'பாட்ஷா', ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் ஈர்த்திலிருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார்.
ரீது வர்மா, கடந்த மார்ச் 10 ஆம் தேதி தனது 33-வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். அதற்காக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவு கடற்கரையில் இருந்து ரீது வர்மா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
சமீபத்தில் ஒகே ஒக ஜீவிதம் (தெலுங்கு), அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் படத்திலும் நடித்திருந்தார். அமேசான் பிரைம் ஒடிடிக்காக "மாடர்ன் லவ் ஹைதராபாத்' என்ற வெப் சீரிஸூம் ரீது வர்மா நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. குறிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம், விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படங்கள் குறிப்பிடத்தக்கது. ரிது வர்மா, விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரீது வர்மா, தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ள மாடர்ன் லவ் சென்னை தொடரில் நடித்து முடித்துள்ளார். இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். தொடரின் வெளியீட்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி மாணவியாக சீருடை அணிந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரீது வர்மா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.