Connect with us
saravana store

வரவேற்பை பெற்ற மோகமுள் திரைப்படம்

Cinema History

வரவேற்பை பெற்ற மோகமுள் திரைப்படம்

தி. ஜானகிராமன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய நூல்தான் மோகமுள் இந்த நூல் நூலாக வந்து பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இந்த நாவலை படமாக எடுக்க விரும்பினார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அந்த படத்தை இயக்க விரும்பிய உடன் முதலில் அவர் மனதில் வந்து போனவர் இளையராஜாவாகத்தான் இருக்கும் ஏனென்றால் இளையராஜா இல்லை என்றால் மோகமுள் படமே இல்லை எனலாம்.

மோகமுள் திரைப்படம் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்தது. பின்னாட்களில் டிவி ஸ்டாராக திகழ்ந்த அபிஷேக் மிக இளம் வயதில் இப்பட கதாநாயகனாக நடித்திருந்தார்.

அர்ச்சனா ஜோகெல்கர் என்ற வட இந்திய நடிகை இப்பட கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் பிராமண குலம் சார்ந்து எடுக்கப்பட்டிருந்தது. மேலும் தஞ்சை, கும்பகோணம் பகுதிகள் சார்ந்துதான் இப்படக்கதை அமைந்திருந்தது.

பிராமண குலத்தை சேர்ந்த ஒரு இளம் வயது வாலிபனுக்கும் மராட்டிய வழி தோன்றல்களாக வாரிசுகளாக தஞ்சை மாவட்டத்தில் இன்றளவும் வாழ்ந்து வரும் ஒரு இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் கதை.

காதல் மட்டும் அல்ல அந்த பெண்ணின் மீது ஏற்படும் காமமும் சார்ந்ததுதான் கதை. ஆனால் காமம் நம் உடல் சார்ந்தது மனிதர்களுக்கு ஏற்படும் இயற்கையான ஒன்று என்ற அடிப்படையிலே டீசண்ட்டாக கையாளப்பட்ட கதை இது.

கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு என்ற அந்தண இளைஞன் மராட்டிய வழியை சேர்ந்த  தன்னை விட மூத்த பெண்ணுடன் ஏற்படுத்திக்கொள்ளும் காதல் மற்றும் காமம் சார்ந்த விசயங்கள்தான் படம்.

ஆனால் அனைவரும் பார்க்கும் வகையில் மிக நாகரீகமான படமாக வந்திருந்தது. இப்படத்தின் இன்னொரு முக்கியமான விசயம் இது ஒரு பீரியட் பிலிம் போல வந்திருந்தது. சுதந்திரத்துக்கு முன் நடப்பது போல இக்கதை அமைந்திருந்தது.

இப்படத்தின் பலம் ஏற்கனவே சொன்னது போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான் காரணம் என சொல்லலாம்.

சொல்லாயோ வாய் திறந்து என்ற பாடல் அனைவரையும் உருக்கும் ஜானகி பாடி இருந்தார். நெஞ்சே குருநாதர் என்ற பாடலை அருண்மொழி பாடி இருந்தார் மேலும் இப்படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் சிறப்பாக இசைத்திருந்தார் இளையராஜா.

இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜா கருநாடக சங்கீத அடிப்படையில் மிகத் திறனுடன் இசையமைத்திருந்தார். சில பாடல்களும் அவற்றின் அடிப்படையான இராகங்களும் பின்வருமாறு:

“கமலம் பாதக்கமலம்” – வாசஸ்பதி
“சொல்லாயோ வாய்திறந்து – சண்முகப்பிரியா
இவை தவிர “சங்கீத ஞானமோ” என்னும் தியாகராஜர் கிருதி அதன் அசலான தன்யாசி இராகத்திலேயே அமைந்திருந்தது.

இப்படம் காதல், காமம் சார்ந்து பின்னணியில் கர்நாடக இசை சார்ந்து அமைக்கப்பட்டு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இன்றளவும் பேசப்படும் ஒரு திரைப்படமாகும்.

Pictures courtesy to Media movies..

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top