விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்த இரண்டு முக்கிய நடிகர்கள்... காரணம் என்ன தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2022-04-21 13:21:30  )
vijay
X

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்து விட்டது.

இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் அப்பாவாக நடிகர் சரத்குமாரும் நடிக்கிறார்கள். இதுதவிர இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் உள்ளார்களாம்.

அந்த அண்ணன்கள் கேரக்டருக்காக இரண்டு பழைய முன்னணி நடிகர்களை படக்குழுவினர் அனுகி உள்ளனர். அதில் ஒருவர் தான் தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் ஹரா என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் மைக் மோகன்.

mohan

மற்றொருவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்து விஜய் அஜித்துக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரசாந்த். இவர்கள் இருவரில் மைக் மோகன் ஹரா படம் வெளியான பின்னரே அடுத்த படம் குறித்து முடிவு செய்வேன் என கூறி விஜய் பட வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

prasanth

அதேபோல் நடிகர் பிரசாந்த் பல ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் அந்தகன் என்ற ரீமேக் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படி உள்ள சமயத்தில் எங்கே அண்ணன் கேரக்டரில் நடித்தால் மார்க்கெட் போய்விடுமோ என்ற பயத்தில் நோ சொல்லி விட்டாராம்

Next Story