இந்த தடவை எங்க ஆட்டம் வேற மாதிரி இருக்கும்! – சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் மோகன் ஜி
தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் மோகன் ஜி இருக்கிறார். ஒவ்வொருமுறை இவரது திரைப்படங்கள் வெளியாகும்போதும் அதுக்குறித்து எதாவது சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம். தற்சமயம் அவர் இயக்கியுள்ள பகாசுரன் திரைப்படம் டீசண்டான ஹிட் கொடுத்தது.
இதற்கு முன்பு வந்த ருத்ர தாண்டவம் நல்ல வெற்றி பெற்றது. முதல் படமான பழைய வண்ணாரபேட்டையை தொடர்ந்து மோகன் ஜியின் இரண்டாம் படமான திரெளபதி திரைப்படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்கு பிறகு ருத்ர தாண்டவம் திரைப்படத்திலும் கூட அவரேதான் கதாநாயகனாக நடித்தார்.
அப்போதே மோகன் ஜி இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரமாக நடித்தனர்.
அடுத்த படம்:
இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் மீண்டும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது.
இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த மோகன் ஜி ”இந்த தடவை வேற மாதிரி களம் வேற மாதிரி ஆட்டம்” என பதிவிட்டுள்ளார்.