Connect with us

Cinema News

விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவாகி உள்ள ஹரா படத்தின் டீசர் நேற்று வெளியானது. அந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது படங்கள் எப்படி வெள்ளி விழா கொண்டாடியது என்பது குறித்தும் ஹரா படத்தில் தான் எப்படி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்பது குறித்தும் மோகன் பேசினார்.

பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கோட் படம் பற்றிய கேள்விகளை அடுக்கிய நிலையில், ஒரு கட்டத்தில் அந்த நிகழ்ச்சியில் வாக்குவாதம் முற்ற ஆரம்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நான் நினைச்சுக் கூட பாக்கல!.. வரலட்சுமி நிச்சயதார்த்தம் பற்றி இப்படி சொல்லிட்டாரே விஷால்!..

மோகன் மற்றும் ராமராஜன் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் சினிமாவில் பல ஆண்டுகள் காணாமல் போய் இருந்த நிலையில், மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளனர். சமீபத்தில் ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் சாமானியன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று மோகன் நடிப்பில் உருவாகி உள்ள ஹரா படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த டீசரில் ஆக்‌ஷன் நாயகனாக துப்பாக்கியை ஏந்திக் கொண்டு மோகன் சண்டை போடும் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் உடையில் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!.. பார்த்தாலே சும்மா ஜில்லுன்னு இருக்கே!..

இருவரும் மீண்டும் படம் பண்ணியிருக்கீங்களே இதை எப்படி பார்க்குறீங்க என்கிற கேள்விக்கு ரொம்ப நல்ல விஷயம் தானே இருவரும் மீண்டும் வெற்றி கொடுப்போம் என பதில் அளித்தார் மோகன். அதன் பின்னர் விஜய்யின் கோட் படத்தில் நடித்தது குறித்த கேள்வியை பத்திரிகையாளர் தொடர்ந்து கேட்கவே டென்ஷன் ஆகி விட்டார்.

லவ்வர் பாயாக நடித்துக் கொண்டிருக்கும் நீங்க விஜய்யின் கோட் படத்தில் என்ன மாதிரியான ரோல் பண்றீங்க என்றும் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், இப்போ விஜய் படத்தில் சைடு ரோலில் நடிப்பதை எப்படி பார்க்குறீங்க என்கிற கேள்விக்கு கடுப்பான மோகன், நான் முதன்முதலில் நடித்த கோகிலா திரைப்படத்தில் கமல்ஹாசன் தான் ஹீரோ. மூடுபனி படத்தில் பிரதாப் போத்தன் தான் ஹீரோ. அப்போதே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். நான் ஒரு நடிகன் நல்ல கதாபாத்திரம் வந்தால் நடிப்பேன் எனக் கூறினார்.

இதையும் படிங்க: சும்மா சும்மா போஸ்டர் விடும் சூர்யா!.. புத்தாண்டு அதுவுமா கடுப்பான ஃபேன்ஸ்?.. கங்குவா ரிலீஸ் எப்போ?

 

google news
Continue Reading

More in Cinema News

To Top