அது நமக்கு செட் ஆகாதுங்க- ஷங்கர் படத்தை நிராகரித்த மலையாள சூப்பர் ஸ்டார்...!
திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய ஆரம்ப காலத்தில் சாதாரண உதவி இயக்குனராக இருந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனராக விஸ்வரூபம் எடுத்திருப்பவர் தான் இயக்குனர் சங்கர். உதவி இயக்குனராக பணியாற்றிய சங்கர் ஜென்டில் மேன் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நாட்டினார்.
அதன் பின்னர் அந்நியன், ஐ, சிவாஜி என பல பிரம்மாண்ட வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சங்கர் படத்தின் வாய்ப்பை வேண்டாம் என கூறி நிராகரித்த சம்பவம் தற்போது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ராம் சரண்15 என பெயர் வைத்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதும் இப்படத்திற்கு இசையமைப்பாளர்
தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் தான் நடிகர் மோகன் லால் நடிக்க மறுத்து உள்ளாராம்.
அதாவது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், கதை கேட்ட பிறகு மோகன்லால் நடிக்க மறுத்து விட்டாராம். ஏனெனில் கதைப்படி வில்லன் கேரக்டர் ஊழல் செய்து அதிகமாக சொத்து சேர்க்கும் அரசியல்வாதி கேரக்டர் என்பதால் மோகன் லால் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது மாநாடு படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டிய எஸ்.ஜே சூர்யாவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவரும் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.