
Cinema News
மௌனராகத்தின் செகண்ட் பார்ட்டாக மாற வேண்டிய அஞ்சலி.. மோகன் பண்ண காரியம்.. மிஸ் ஆயிடுச்சு
80கள் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஒரு புதிய பயணத்தை நோக்கி நகர்த்திச் சென்றவர் மணிரத்னம். எப்படி நடிப்பிற்கு சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என்று பிரிக்கலாமோ அதை போல திரைக்கதையையும் மணிரத்னத்திற்கு முன் மணிரத்னத்திற்கு பின் என பிரிக்க முடியும். அவர் படங்களில் பெரும்பாலும் சுருக் வசனம் தான் இடம்பெறும். அதுதான் அவருக்கு பிளஸ் பாயிண்ட்.படத்திற்கும் அதுதான் பிளஸ்.
நீண்ட வசனங்கள் இருக்காது. கதைக் கோர்வையும் ரசிக்கும் படியாக இருக்கும். கதை போக்கும் நம்மை அப்படியே கதையினுள்ளே கொண்டு செல்லும். அப்படி தமிழ் சினிமாவை தலைகீழாக புரட்டி போட்டவர் மணிரத்னம். இத்தனைக்கும் மணிரத்னம் இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக இருந்ததில்லை.இதுவே ஒரு புதிய பாணியை தமிழ் சினிமாவில் மணிரத்னம் உருவாக்க காரணமாக இருந்திருக்கலாம்.
இவர் இயக்கிய முதல் திரைப்ப்டம் பல்லவி அனுபல்லவி. கன்னடத்தில் உருவான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற தமிழுக்கும் இவரை கொண்டு வந்து சேர்த்தது. மணிரத்னம் படைப்பில் எத்தனையோ பிரம்மாண்ட படைப்புகள் வந்தாலும் மௌனம் ராகம் திரைப்படம்தான் இவரை மக்களிடையே கொண்டு சேர்த்த படமாக அமைந்தது. முக்கோண காதலை மையப்படுத்தி எதார்த்தமான காதல் கதையை சொல்லிய படமாக இது அமைந்தது.

anjali
இந்த படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் அஞ்சலி படம் உருவாக இருந்ததாம். அதில் ரகுவரனுக்கு பதிலாக முதல் ரேவதிக்கு ஜோடியாக மோகனைத்தான் போட இருந்தாராம் மணிரத்னம். மோகன் ரேவதிக்கு இரண்டு பிள்ளைகள்.அவர்களுடன் மூன்றாவது குழந்தையாக மனவளர்ச்சி குன்றிய அஞ்சலியாக பேபி ஷாமிலி இப்படித்தான் மோகனிடமும் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
அதற்கு மோகன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைனு சொல்லிட்டு எப்படி தனியாக படுக்க வைப்பீர்கள். அது எதார்த்ததிற்கு எதிரானது. மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை பெற்றோர் தங்களுடன் தானே படுக்க வைப்பார்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மணிரத்னம் அவருடைய எண்ணத்தில் உறுதியாக இருந்தாராம். அதனால்தான் மோகன் அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.