கமல்ஹாசனுடன் கோகிலா படத்தில் நடித்த மோகன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுகாசினி மணிரத்னம் கேள்வி கேட்க ஏகப்பட்ட பழைய நினைவுகளை ரசிகர்கள் உடன் பகிர்ந்துள்ளார். மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா திரைப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு நடிகர் மோகன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
சினிமாவில் நடிகராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என்றும் பிஎஸ்சி முடித்துவிட்டு வேலைக்கு செல்ல நினைக்கும் போது சில கன்னட இயக்குனர்கள் தன்னைப் படங்களில் நடிக்க வைத்ததாகவும் அதன் பின்னர் பாலச்சந்தர் தமிழுக்கு தன்னை நடிக்க வைக்க அழைத்ததாகவும், ஆனால் அவர் படத்தில் நடிக்காமல் பாலுமகேந்திராவின் மூடுபனி படத்தில் நடித்து அறிமுகமானதையும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஹீரோவுடன் நடிக்க வந்த 10 படங்களின் வாய்ப்பு! ஐய்யயோ வேண்டாண்டா சாமி என ஓடிய வாணிபோஜன்
கோகிலா படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றது. கமல்ஹாசனின் முதல் கன்னட படம் அது. என்னுடைய முதல் படமும் அதுதான். கமல் சாரை கல்லூரி காலத்தில் இருந்து பார்த்து ரசித்து வந்திருக்கிறேன். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் எனக் கருதினேன்.
அப்போதே கமல் சார் சூட்டிங் வந்தால் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் அவரைப் பார்க்க வந்து விடுவார்கள் அந்த அளவுக்கு கிரேஸ் அப்பவே இருந்தது என்றார். கமல் பற்றி இவ்வளவு சொல்றீங்க ஆனால் எங்கள் வீட்டில் நீங்கள் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, கமல் வந்தால் மட்டும் ஏன் எழுந்து ஓடுறீங்க என்றே சுகாசினி கேட்டு கோர்த்து விட்டார்.
இதையும் படிங்க: அப்போ விஜய்யோட சிஎம் கனவு அவ்ளோதானா?.. வெயிட்டுக் காட்டிய திமுக!.. தவெக தலை எடுக்குமா?..
உடனடியாக பயந்து போன மோகன் அது அவருக்கு கொடுக்கிற ரெஸ்பெக்ட் என்றும் கமல் சார் அப்போதிலிருந்தே மிகப்பெரிய லெஜண்ட், உலக நாயகன். அதனால் தான் அவர் வரும் போது எழுந்து விடுகிறேன் என்றும் கிளம்பிச் செல்கிறேன் என்றும் மோகன் மழுப்பலாக பதில் அளித்து தப்பித்துக் கொண்டார். கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளில் உங்களையும் அழைத்து கமலுடன் அரை மணி நேரம் பேச வைக்கப் போகிறேன் என்றும் சுஹாசினி பயம் காட்டியுள்ளார்.
ஹரா படத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 5ம் தேதி தளபதி விஜய்யுடன் இணைந்து வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்துள்ள கோட் திரைப்படமும் வெளியாக காத்திருக்கிறது.
இதையும் படிங்க: பாடகர் எஸ்.பி.பி பிறந்தநாள் இன்று!.. ஒரு வரியில் இளையராஜா போட்ட நெகிழ்ச்சி பதிவு!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…