எந்த கணவனும் இதுக்கு ஒத்துக்க மாட்டான்! பெண் ரசிகையின் செயலால் ஆடி போன மோகன்

Published on: June 11, 2024
mohan
---Advertisement---

Actor Mohan: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். வெள்ளி விழா நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்கு இவரின் பெரும்பாலான படங்கள் 100 நாட்களைக் கடந்து வெள்ளிவிழா கண்ட படங்களாக அமைந்தன. இவருடைய அடையாளமாக கருதப்பட்டது இவர் நடித்த ஒரு சில படங்களில் பெரும்பாலும் மேடையில் மைக்கை பிடித்து பாடும் காட்சிகளில் நடித்ததனால் மை மோகன் என்றும் அழைக்கப்பட்டார்.

அதுவே பின்னாலில் அவருடைய பெயராக மாறியது. அந்த காலத்தில் இருந்த பல நடிகைகளுக்கு பிடித்தமான ஹீரோவாகவும் வலம் வந்தார் மோகன். லவ்வர் பாயாக ஹேண்ட்ஸ்மான ஹீரோவாக அனைவருக்கும் பிடித்த நடிகராக இருந்து வந்தார். இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ஹரா .

இதையும் படிங்க: உதயநிதிக்கு பெரிய தலைவலியே விஜய்தான்! கேப்டனும் ரஜினியும் சேர்ந்த கலவை.. அசைக்க முடியுமா?

ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் சரியாக போகவில்லை. கோட் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிதது வருகிறார் மோகன். இந்த நிலையில் சமீப காலமாக பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் மோகன் தனக்கு இருந்த பெண் ரசிகை ஒருவரின் செயலை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். ஒரு சமயம் மலேசியாவில் இருந்து விமானத்தில் திரும்பும் போது அங்கு ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் மகனுடன் அந்த விமானத்தில் அமர்ந்திருந்தாராம்.

அப்போது இவரும் அந்த பெண் ரசிகையும் பேசிக்கொண்டு வர அருகில் இருந்த அந்த மகன் தன் அம்மாவிடம் அம்மா அதை காட்டுங்கள் எனக் கூறியிருக்கிறார். உடனே அந்த பெண் தன் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து அதில் இருந்த லாக்கெட்டை திறந்து காண்பித்திருக்கிறார். அதில் மோகனின் புகைப்படம் இருந்ததாம்.

இதையும் படிங்க: இந்தியன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. கோட்டை விட்டு புலம்பிய நடிகை!.. அட அவரா?!…

அதை பார்த்ததும் மோகனுக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். அதைப்பற்றி அந்த பெண் கூறும்போது திருமணம் ஆன புதிதில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதை என் கணவரிடமும் நான் காட்டினேன். சரி வைத்துக் கொள் என்று அவர் கூறினார். அதனால் சாகும் வரை இதை என் தாலியிலேயே வைத்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார் . இதை கேட்ட மோகனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லையாம். இப்படிப்பட்ட கணவரைத்தான் பாராட்ட வேண்டும்.  மேலும் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதினால் தான் இன்னுமும் சினிமாவில்  நிலைக்க முடிகிறது என மோகன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.