நாங்க பிஸி...அஜித் படத்துல நடிக்க முடியாது.. கை விரித்த 2 சூப்பர்ஸ்டார்கள்...
போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வலம் வந்தாலும் இதை போனிகபூர் இன்னும் உறுதிசெய்யவில்லை.
இதையும் படிங்க: தனித்தனியா பாத்தீங்க.. இப்ப மொத்தமா பாருங்க!….கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட கிரண்….
ஏற்கனவே, இந்த படம் 2 வருடங்களாக தயாரிப்பில் இருந்த வலிமை படத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அதாவது எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நாம் இணைவோம் என அஜித் வாக்குறுதி கொடுத்தார். குறைந்த நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் அப்படம் உருவாகவுள்ளது. அப்படத்தையும் ஹெச். வினோத்தே இயக்கவுள்ளார்.
இது அஜித்திற்கு 61வது படமாகும். தற்போது வலிமை பட ரிலீஸ் தள்ளி போயுள்ள நிலையிலும், அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு அடுத்து இப்படத்தில் ஒரு பவர்புல்லான கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம். அதில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை அழைத்துள்ளனர்.
ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. எனவே, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை நடிக்க அழைத்தனர். அவரும் ஒரு வருடத்திற்கு என் கால்ஷீட் புல் எனக் கூறி கை விரித்துவிட்டாராம். எனவே, யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து வருகிறது படக்குழு.