எங்கேயும் ஓடி ஒளியவில்லை! பாலியல் புகார் பற்றி வாய் திறந்த மோகன்லால்..
Mohanlal: மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான பிரச்சனை தீயாய் பரவும் நிலையில் அதைப்பற்றி எதுவுமே வாய் திறக்காத மோகன்லால் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவருடைய கருத்துக்களை பற்றி விளக்கியுள்ளார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்கு தான் இருக்கிறேன். அம்மா நடிகர் சங்கத்தை மட்டுமே இந்த பிரச்சனைக்கு குறை சொல்ல முடியாது. மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்பது போல மோகன்லால் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: இலவச உணவு கொடுப்பதை தடுக்கும் சூரியின் ஹோட்டல் ஊழியர்கள்!.. மதுரையில் பரபரப்பு!..
மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார் மோகன்லால். அந்தப் பதவியில் இருந்து திடீரென பதவி விலகிய மோகன்லால் அந்த சங்கமே முழுவதுமாக கலைக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தை பற்றி எந்த ஒரு அவதூறு செய்திகளும் பரப்ப வேண்டாம். சங்கத்தை மட்டுமே குறை சொல்வது சரியில்லை.
மலையாள திரை உலகம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார் மோகன்லால். மேலும் ஹேமா கமிஷனை நான் முழுவதுமாக வரவேற்கிறேன். மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: வாயக் கொடுத்து வம்படியா மாட்டிக்கிறது! விசாரணையை ராதிகா பக்கம் திருப்பிய கமிஷன்
சமீபத்தில் நடந்த வயநாடு பேரிடர் ,கார்கில் போன்ற பிரச்சினைகளுக்கு அம்மா சங்கம் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. இந்த பாலியல் குற்றச்சாட்டில் யாரெல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த பிரச்சனை எல்லா துறைகளிலும் கலையப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என மோகன் லால் கூறியிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மலையாள சினிமாவில் இருக்கும் டாப் 5 நடிகர்கள் தான் இந்த பாலியல் சர்ச்சையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: விஜயகாந்த் ஏஐ பயன்படுத்திய அரசியல் காரணமா? கேள்விக்கு நச்சு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு
அதில் முதல் இடத்தில் இருப்பவரே மோகன்லால் தான் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதனால்தான் அவர் சங்கப் பதவியில் இருந்து விலகினார் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் மௌனம் காத்து வந்த மோகன்லால் இன்று செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய இந்த கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.