அந்த மேட்டரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மோகன்லால்.. அன்றே கணித்த ஷாரூக்கான்!..

by Rohini |   ( Updated:2024-08-30 09:10:54  )
sharuk
X

sharuk

Mohanlal: மலையாள சினிமாவை பற்றி நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. கேரளா அரசின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா இவரின் தலைமையில் கமிட்டி ஒன்றை ஆரம்பித்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி அந்த கமிட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் ஒரு வங்காள நடிகை ஹேமா கமிட்டியிடமும் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜியிடமும் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் இருக்கும் ஒரு நடிகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என ஒரு ஆதாரத்துடன் அந்த புகாரை கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதைப்பற்றி மம்தா பானர்ஜியும் கேரளா அரசுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் பேர் சொல்ல விரும்பாத ஒரு நடிகை மலையாள நடிகர் சித்திக் மீது ஒரு புகாரை கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது .அதாவது 2016 ஆம் ஆண்டு எந்த ஒரு விஷயமும் தன்னிடம் சொல்லாமல் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு என்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார் என அந்த புகாரில் சித்திக் மீது அந்த நடிகை புகார் கூறி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: டிக்கெட் ஓபன் செஞ்ச முதல் நாளே கோட்டுக்கு பஞ்சாயத்து… ஒன்னு கூடிட்டாங்கப்பா!

இதை வெளியில் சொன்னால் நடக்கிறதே வேற என சித்திக் அப்போது அந்த நடிகையை மிரட்டி இருந்தாராம். ஆனால் இப்போது ஹேமா கமிட்டி வந்த பிறகு தான் மிக தைரியமாக இந்த விஷயத்தை அந்த நடிகை வெளியில் கொண்டு வந்திருக்கிறார் என தெரிகிறது. மலையாள சினிமாவில் 2017ல் வெடித்த இந்த சம்பவம் பூதாகரமாகி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா ஒரு கமிட்டியை ஆரம்பித்து விசாரணை நடத்த ஆரம்பிக்கிறார். 2019 ஆம் ஆண்டில் 234 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையை தயார் செய்கிறார்கள்.

அந்த அறிக்கையில் மலையாளத்தில் இருக்கும் டாப் 10 நடிகர்களின் பெயர்கள் இருக்க அதை வெளியிலேயே சொல்ல விடாமல் மறைக்கிறார்கள். காரணம் என்னவெனில் அந்த அறிக்கையில் இருக்கும் மிக முன்னணி நடிகர்களுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒரு இணக்கம் இருப்பதினால் தான். ஒரு வெள்ள நிவாரணமாகட்டும். எந்த ஒரு இயற்கை சீற்றமானாலும் இந்த நடிகர்களின் பெரும் தொகை தான் நிவாரணமாக கேரள அரசுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

moh

moh

இதையும் படிங்க: 10 லட்சம் பணமும் வீடும் கட்டிக் கொடுத்த சந்தானம்! எந்த நடிகருக்கு தெரியுமா?

அதனால் இவர்களின் பெயர்களை வெளியிடாமல் இதுநாள் வரை காத்து வந்திருக்கிறார்கள் என இந்த செய்தியை கூறிய செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவரே மோகன்லால் தான் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதுவும் 234 பக்கம் கொண்ட அந்த அறிக்கை முழுவதுமாக வெளியிடப்படவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக லீக் ஆனதிலிருந்து பார்த்தால் அதில் மோகன்லாலின் பெயர் தான் அடிக்கடி இடம் பெற்றுக் கொண்டே வருகின்றன. அதன் காரணமாகத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் பதவி விலகியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு ஒரு உதாரணமாக கேரளாவில் நடந்த ஒரு விழாவிற்கு ஷாருக்கான் விருந்தினராக வர அவரை வரவேற்பதற்கு 12 நடிகைகள் சென்றார்களாம்.

இதையும் படிங்க: அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்த கோட்… 3 மணி நேரம் போறதே தெரியாதாம்..!

12 நடிகைகளும் ஷாருக்கானை கட்டிப்பிடித்து வரவேற்று இருக்கிறார்கள். ஷாருக்கான் மேடை ஏறியதும் மம்மூட்டி ,பிரித்விராஜ் போன்றவர்கள் ஹிந்தியில் வந்து நடிக்கிறார்கள். மோகன்லால் மட்டும் இங்கிருந்து ஹிந்திக்கு வர மறுக்கிறார். அதற்கான காரணம் இப்போது தான் எனக்கு தெரிகிறது என சூசகமாக கூறினாராம் ஷாருக்கான்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அன்றே கணித்த ஷாருக்கான் என கூறி வருகிறார்கள். அவர் சொன்னதில் என்ன ஒரு உள் அர்த்தம் இருக்கிறது என்பதை நம்மாலும் யூகிக்க முடிகிறது என செய்யாறு பாலு கூறினார்.

Next Story