
Cinema News
விஜய் பண்ணது எனக்கு செட்டாகாது!.. ’எம்புரான்’ மோகன்லால் நறுக்குன்னு சொல்லிட்டாருங்க!..
மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் இந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அந்த படத்தில் இரண்டாம் பாகம் தான் எம்புரான்.
தமிழ் சினிமாவில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, அரண் மற்றும் ஜெயிலர் என பல படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். அவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. த்ரிஷ்யம் படத்தை இங்கே பார்க்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். பாபநாசம் என அந்த படத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தும் நடித்திருந்தார்.
மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய பரோஸ் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி தோல்வியை தழுவியது. தொடர்ந்து மோகன்லால் நடித்து வரும் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், அவருக்கு கம்பேக் படமாக எம்புரான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மோகன்லால் விஜய் பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் பேசியுள்ளார். ஜெயிலர் 2 படத்தில் மீண்டும் மேத்யூஸ் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.
விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மோகன்லால், அது அவருடைய விருப்பம். அதை முடிவு செய்யும் முழு உரிமையும் அவருக்கு உள்ளது. அதில், கருத்து சொல்ல என்னால் முடியாது. ஆனால், அது என்னோட கப் ஆப் டீ இல்லை. நான் அரசியலுக்கு வருவேனா என்றால் அதை நான் செய்ய மாட்டேன். அதில், எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை எனக்கூறியுள்ளார்.