ரஜினி, கமல், விஜய்க்கு புத்தில உரைக்கிற மாதிரி சொன்ன மோகன்லால்.. உண்மைதான்

by Rohini |
mohan 1
X

mohan 1

தமிழ் சினிமாவை விட மலையாள படங்களை சமீப காலமாக தமிழ் ரசிகர்கள் வரவேற்க தொடங்கியுள்ளனர். அதற்கு ஒரே காரணம் சமீப காலமாக நல்ல கதை அம்சத்தோடு மலையாள சினிமாவில் படங்கள் தொடர்ந்து வருவது தான். சின்ன பட்ஜெட்டில் அதிக லாபத்தை பார்க்கும் படங்கள் ஏராளமாக மலையாள சினிமாவில் உருவாகிக்கொண்டு வருகின்றன.

அது மட்டுமல்ல இங்கு ரஜினி விஜய் கமல் அஜித் இவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் அங்கு ஒரு படத்தையே எடுத்து விடுகின்றனர். அதுவும் மலையாள சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. அந்த வரிசையில் தற்போது மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கின்றன.

இது ஒரு பேன் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த படத்தை நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிறது. வரும் 27ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது .இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு நிருபர் மோகன்லாலிடம் ரஜினி விஜய் கமல் இவர்களுடன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் யாரும் அந்த மாதிரி மலையாள படங்களில் வந்து கேமியோ ரோலில் நடிப்பதில்லையே? உங்களால் மட்டும் ஏன் அப்படி முடிகிறது என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல் ஏனெனில் நான் ஒரு நடிகன் என்று கூறி கைத்தட்டலை பெற்றார் மோகன்லால்.

கேமியோ ரோல், சின்ன ரோல் அப்படி என்று எதுவும் கிடையாது, எந்த ரோலாக இருந்தாலும் என்னுடைய டேட் இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என கூறினார் மோகன்லால், விஜய் உடன் ஜில்லா, கமலுடன் உன்னைப் போல் ஒருவன் ,ரஜினியுடன் ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து மாஸ் காட்டிய மோகன்லால் இதுவரை அந்த நடிகர்கள் யாரும் மலையாள படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story