ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சி கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போது 25 ஆயிரம் சீட்டுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்ததால் பெரும் பிரச்சனையானது. பலர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து இருக்கை மட்டுமின்றி நிற்கக் கூட இடமில்லாமல் அந்த இடத்தை காலி செய்து கடுப்பில் மிகப்பெரிய அளவில் டிராபிக் ஜாமே ஆனது. டிக்கெட் விற்பதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகளும் கிளம்பின.
ஆனால், கலைஞர் 100 விழா நேற்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் தென்னிந்திய நடிகர்கள் எல்லாம் வருவார்கள் என பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் அந்த விழாவில் பங்கேற்றும் அதிகளவில் ரஜினிகாந்த் பேசும் போதே நாற்காலிகள் காலியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: எதையும் தாங்கும் அப்பா மனசு உடைஞ்சி போனது அப்பதான்!.. ஃபீல் பண்ணி பேசும் கேப்டன் மகன்..
பொதுமக்களுக்கு இலவச டிக்கெட்டுகள் என்று அறிவிக்கப்பட்டாலும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அனுமதி சீட்டை பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பொதுமக்கள் கலைஞர் 100 விழாவுக்கு செல்வதை புறக்கணித்து விட்டனர் என்றே தெரிகிறது.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டேன் என ஒரு நடிகர் கலைஞரிடம் சொன்னார். அதன் பின்னர் அந்த நடிகரை தன்னுடன் அழைத்துக் கொண்டு படம் பார்க்க வரச் சொல்லும் போது காய்ச்சல் என்றார் அந்த நடிகர். வந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்திய நிலையில், அந்த நடிகர் தியேட்டருக்கு வந்த போது சூரியன் பக்கத்தில் உட்காருங்க காய்ச்சல் சரியா போய்விடும் என்றார் அவர் தான் கலைஞர் என்றும் அந்த நடிகர் வேறு யாரும் இல்லைங்க நான் தான் என ரஜினிகாந்த் பேசிய நிலையில், திமுக மேடையிலேயே அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டதை கெத்தாக சொல்றாருய்யா ரஜினிகாந்த் என அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். எம்ப்டி சாருக்கு எல்லாம் குட்டி கதை சொல்றாருப்பா ரஜினி என அவரது ஹேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவர் இல்லாமல் தனியாக வந்த நயன்தாரா!.. கலைஞர் 100 விழாவுக்கு யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா?
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…