கொஞ்சம் விட்டுருந்தா ‘துணிவு’ கைமாறி போயிருக்கும்!.. வினோத்தை ஏளனமாக பார்த்த நடிகர்.. ப்ளான் பண்ணி தூக்கிய அஜித்!..
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் படம் ‘துணிவு’. இந்த படத்தில் அஜித் ஒரு வங்கிக் கொள்ளையனாக நடித்திருக்கிறார். மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பொங்கல் ரிலீஸாக வெளிவரும் துணிவு படத்தை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் கதையை வினோத் முன்னதாகவே அஜித்திடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் என்னவோ இந்த கதையை பொறுத்து எடுத்துக் கொள்ளலாம் என்று காத்திருக்க வைத்து இப்பொழுது முடிந்திருக்கிறது.
இதையும் படிங்க : சொந்த தந்தையை இப்படியா அவமானப்படுத்துறது… என்ன இருந்தாலும் விஜய் இப்படி பண்ணிருக்க கூடாது…
இதற்கு முன்னதாக துணிவு படத்தின் கதையை வினோத் நடிகர் சூர்யாவிடம் தான் சொல்லியிருக்கிறார். அந்த சமயம் வினோத் சதுரங்க வேட்டை படத்தை எடுத்து முடித்திருந்தார். சதுரங்க வேட்டை படம் நல்ல வரவேற்பை பெறவே சூர்யா வினோத்தை பார்க்க அனுமதித்தாராம்.
ஆனால் கதையை கேட்டுவிட்டு படத்தின் கதை தரமானதாக இருக்கிறது. ஆனால் இந்த கதையை எடுக்க இவருக்கு பக்குவம் இருக்குமா ? என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் வினோத் அந்த சமயம் பார்ப்பதற்கு மிகவும் சின்ன பையனாக இருந்திருக்கிறார். அதனாலேயே தோற்றத்தை பார்த்து சூர்யா குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்.
அதன் பின் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் படத்தை எடுத்து சும்மா அல்லு தெறிக்கவிட்டார் வினோத். இந்த படத்தை நடிகை ஷாலினி பார்த்து அஜித்திடம் சொன்னாராம். படத்தின் கதை எடுத்த விதம் என எல்லாவற்றையும் அஜித்திடம் விவரித்திருக்கிறார் ஷாலினி.
அதன் பிறகு தான் அஜித் வினோத்தை தட்டி தூக்கியிருக்கிறார். அந்த பக்கம் சூர்யாவும் தீரன் அதிகாரம் வெற்றியை அறிந்து வினோத்தை அணுக முயற்சி செய்ய அஜித்திடம் கமிட் ஆகிவிட்டாராம் வினோத். இதே மாதிரி தான் முருகதாஸ் மிரட்டல் படத்தை அஜித்தை வைத்து எடுத்து படம் பாதியிலேயே நின்று போக
சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் மீண்டும் எடுத்தார் முருகதாஸ். இப்படி ஏதாவது ஒரு வகையில் சூர்யாவிற்கும் அஜித்திற்கு ஒரு க்ளாஸ் இருந்து கொண்டு வருகின்றது. இந்த செய்தியை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.