Connect with us
kamal_main_cine

latest news

பிக்பாஸ் பார்க்காதவர்களை கூட பார்க்க வைத்த பிரபலம்!..இரண்டே நாளில் ஏகப்பட்ட ஆர்மிகளை பெற்று சாதனை!..

விஜய் டிவியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியிலும் முன்னிலையில் இருக்கும் நிகழ்ச்சி ஆகும். எப்பொழுதும் விஜய்டிவியில் நேரடியாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை டிஸ்னி ப்ளஸில் நேரடியாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கின்றது.

kamal1_cine

5 சீசன்களை கடந்து 6 ஆவது சீசனில் அடியெடுத்து வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்ற சந்தேகம் பல பேருக்கு இருந்த வந்தது. ஆனால் கமல் புத்திசாலித்தனமாக படப்பிடிப்புக்கு பாதி நாள் பிக்பாஸுக்கு பாதி நாள் என்று தனது செட்யூலை பிரித்து வைத்து அவரே தொகுத்து வழங்குவதாக தெரிவித்தார்.

kamal2_cine

இந்த சீசனில் தெரிந்த தெரியாத சில பிரபலங்கள் வந்த நிலையில் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஜி.பி,முத்து பங்கேற்றது சற்று ஆச்சரியத்தை அளித்தது. இவரால் உள்ளே சமாளிக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறார்.

இதையும் படிங்க: வேலையே இல்லாமல் ராஜினாமா செய்த நாகேஷ்… இந்த மாதிரி சம்பவமெல்லாம் யாருக்குமே நடக்காது!!

kamal3_cine

வீட்டிற்குள் போய் இரண்டு நாள்களாயினும் அனைவரையும் தனது எதார்த்தமான பேச்சால் பந்தாடி வருகிறார். பிக்பாஸுக்கு முன்னதாகவே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் போன பிறகு அவருக்கு என்று தனிப்பட்ட ஆர்மிகளை உருவாக்கி ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

google news
Continue Reading

More in latest news

To Top