‘ஜெய்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! மாஸ் காட்டப் போகும் தலைவர்
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது நடிகர் ரஜினிமட்டும்தான் என்ற அளவுக்கு சமீபத்தில் வெளியான ஜெய்லர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளில் புரியும் மாதிரி சொல்லியிருக்கிறார் ரஜினி. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி இப்போது முன்னனி நடிகராக இருக்கும் சில நடிகர்களிடையே இருந்து வருகிறது.
அவர்கள் சும்மா இருந்தாலும் அவரவர் ரசிகர்களால் இந்த போட்டி கடுமையாக மாறிவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயை சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் சொன்னதில் இருந்து சிவகார்த்திகேயனையும் குட்டி ரஜினி என்று நடிகை சரிதா ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.
இப்படி மூத்த நடிகர்கள் கொளுத்தி விட்டு போக அது இன்றைய நடிகர்களுக்கிடையே சில பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிதான் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். ஆனால் அவரை அடுத்து யாரு வேண்டுமென்றாலும் வரலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : தீபாவளிக்கு வெளியான ஒரே ஹீரோவின் 4 படங்கள்!.. எல்லாமே கிளாசிக் ஹிட்ஸ்!..
மேலும் ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் ஜெய்லர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் திரைப்பிரபலங்கள் பலரும் வருவதாக கூறுகிறார்களே? மேலும் அந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்கையில் அந்த ஐந்து மொழிகளிலும் ரஜினிதான் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறாரா? என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ஐந்து மொழிகளுக்கு ரஜினிதான் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது தவறு என்றும் ஆனால் அந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறினார்.