
Cinema News
எதிர்பார்ப்பு இல்லாமல் ஹிட்டான தமிழ் படங்கள்.. ரஜினி ஸ்டைல்னாலும் கெத்து காட்டிய டிராகன்
தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்கள் நடித்தால் தான் அந்தப் படம் செம கலெக்ஷன் ஆகும். நல்ல ஹிட் ஆகும் என்கிற ஒரு பிம்பத்தை சமீப காலமாக உடைத்து வருகிறது தமிழ் சினிமா. அதற்கு காரணம் ரசிகர்களின் ரசனையும் கூட. ஆரம்பத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த படத்தில் ஒரு மாஸ் இருக்கணும், ஆக்சன் காட்சிகள் இருக்கணும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து திரையரங்கிற்கு சென்றார்கள்.
ஆனால் இப்போது அவர்களின் ரசனையே மாறி இருப்பதால் நல்ல கதைகளத்தோடு ஒரு படம் வெளியானாலே அந்தப் படத்தை ஓட வைத்து விடுகின்றனர் ரசிகர்கள். அப்படி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படங்களின் லிஸ்ட் பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும்.
சாதாரண ஒரு கல்லூரி கதையை மையமாக வைத்து இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்தார் அஷ்வத் மாரிமுத்து. இத்தனைக்கும் அவரும் ஒரு பெரிய இயக்குனர் கிடையாது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு இந்த படத்தை அவர் இயக்கி இருக்கிறார். ஆனாலும் கதையோட்டம் திரைக்கதை அமைப்பு என பார்க்கும் ரசிகர்களை சலிக்காமல் பார்க்க வைத்தார் அஸ்வத் மாரிமுத்து .
இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடி வரை வசூலித்து இருக்கிறது. அடுத்ததாக மத கஜ ராஜா 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். எப்படி இது ஓட போகிறது என்ற ஒரு சந்தேகத்தின் பெயரில் தான் இந்த படமே வெளியானது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றியை இந்த படம் பதிவு செய்தது. அதுவும் விஷாலின் மார்க்கெட்டும் அந்த நேரத்தில் சொல்லும்படியாக இல்லை. ஏதோ ஒரு தைரியத்தில் படத்தை ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி ஆக்கினர் படக்குழு.
தமிழ் சினிமா அதள பாதாளத்தில் கிடந்த போது தூக்கி நிறுத்திய படமாக அரண்மனை 4 திரைப்படம் அமைந்தது. கடந்த வருடம் முதல் வெற்றியை பெற்ற படமாக அரண்மனை 4 திரைப்படம்தான் இருந்தது. அதே வருடத்தில் லால் சலாம், இந்தியன் 2 என மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் எல்லாம் வெளியான நிலையிலும் அரண்மனை 4 திரைப்படத்தின் அருகில் எந்தப்படமும் நிற்க முடியவில்லை .
இது எல்லாவற்றிற்கும் மேலாக சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதைகளம் இருந்தால் அந்த படம் கண்டிப்பாக ஓடும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது லவ் டுடே திரைப்படம்தான். அதுவரை முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே மதிப்பு மரியாதையும் இருந்தது. ஆனால் லவ் டுடே படத்திற்கு பிறகுதான் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக ஒரு நல்ல கதை இருக்கும் என ரசிகர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்த படமாக லவ் டுடே படம் அமைந்தது. இப்படி பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்