ரஜினிகாந்த் திருமணத்தில் பத்திரிக்கை இல்லை... நண்பர்கள் கூட இல்லாமல் போனது ஏன் தெரியுமா?

Rajinikanth: ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதாவை 1981ம் ஆண்டு பிப்ரவரி 2ந் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் திருமணம் வெகுவிமரிசையாக கொண்டாடவில்லை. பத்திரிக்கை இல்லை பெரிய கூட்டம் இல்லாமல் நடந்ததற்கு காரணம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சடிக்கவில்லை. அவரோடு நெருங்கி பழகியவர்கள். நடிகனாக உடன் இருந்தவர்களை கூட கூப்பிடாமல் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: கடவுள்தான் காப்பாத்தனும் குமாரு! அமீர் பிரச்சினையால் பின்வாங்கும் சமுத்திரக்கனி.. நண்பன்னா ஓடி வருவீங்க

ரஜினி திருமணத்தில் உடன்பிறந்தவர்கள் தவிர வேறு யாரும் இல்லை. தன் தந்தையை கூட அழைக்காமல் தான் திருமணம் செய்து கொண்டாராம். பெங்களூரில் ரஜினி கண்டக்டராக இருந்த போது உடன் இருந்த ராஜ்பக்தூர் உள்ளிட்ட சில நண்பர்களை அழைத்தாராம்.

தாலி கூட தங்கத்தில் சரடு இல்லாமல் இருந்ததாம். வெறும் மஞ்சள் கயிறில் தங்க தாலியை கோர்த்து கட்டி இருக்கிறார். இதுகுறித்து ரஜினியிடம் கேட்ட போது கூட மனசார ஒருத்தியை நினைத்து திருமணம் செய்வது தான் முக்கியம். தங்கம் முக்கியம் இல்லை என்றாராம்.

அதுமட்டுமல்லாமல், ரஜினி முன்னணி நடிகராக இருந்த போது திருமணம் செய்து கொண்டாராம். அந்த சமயத்தில் அவரால் 4 லட்சம் பேருக்கு கூட சாப்பாடு போட முடியும். அந்த வெட்டிசெலவை செய்யக்கூடாது என நினைத்தாராம். சென்னையில் இருந்த சில அனாதை இல்லங்களுக்கு சாப்பாடு போட்டு சீருடை கொடுத்தாராம்.

இதையும் படிங்க: ஆர்மோனியத்தை தொடாமல் வித்தியாசமாக இசை அமைத்த இளையராஜா… என்ன படம்னு தெரியுமா?

ரஜினியிடம் தேன்நிலவு எங்கு செல்ல போகிறீர்கள் எனக் கேட்ட போது நான் அதுக்கெல்லாம் போகும் ஐடியாவில் இல்லை. விஸ்கியை அடித்துவிட்டால் இருக்கும் இடமே தேன் நிலவு தான். ஆனால் நான் குடிப்பதை நிறுத்துவிட்டு உடல்நலத்தினை பார்த்துக்க போகிறேன். இனி என் வாழ்க்கை லதாவுக்கு தான் எனவும் தெரிவித்தார்.

 

Related Articles

Next Story