இந்த பிரபல சீரீயல் முடிவுக்கு வந்ததுக்கு இதுதான் காரணமா? அவசரத்தில் வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜய் டிவி கோமாளி…
விஜய் தொலைக்காட்சி
தமிழக தாய்மார்களிடையே விஜய் டிவி சீரீயல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. “பாரதி கண்ணம்மா”, “பாக்கியலட்சுமி”, “தமிழும் சரஸ்வதியும்” போன்ற பல நாடகங்கள் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக்கொண்ட தொடர்களாக இருக்கின்றன. இதில் “பாரதி கண்ணம்மா” முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. அதே போல் “பாக்கியலட்சுமி” தொடர் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.
அதை தவிர்த்து “குக் வித் கோமாளி”, “பிக் பாஸ்”, “சூப்பர் சிங்கர்” போன்ற பல ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு விஜய் தொலைக்காட்சி சின்னத்திரையில் உச்சத்தில் இருக்கிறது.
மௌன ராகம்
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மக்களை கவர்ந்த தொடரான “மௌன ராகம் 2” தற்போது முடிவுக்கு வந்துள்ளது. “மௌன ராகம்” முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது சீசன் தொடங்கியது.
ரவீனா தாஹா
இதில் “குக் வித் கோமாளி” புகழ் ரவீனா, சக்தி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த சீசன் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ரவீனா சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர், “மௌன ராகம் சீரியலுக்கு டிஆர்பி கம்மியாக இருப்பதால்தான் இந்த சீரியலை முடித்துவிட்டார்கள் என்று சில பேச்சுக்கள் அடிபடுகின்றதே உண்மையா?” என கேட்டிருந்தார்.
அதற்கு முதலில் “ஆம்” என்று பதிலளித்தார் ரவீனா. அதன் பின் நிருபர் மீண்டும் அழுத்தி “அப்படியா?” என கேட்க, அதன் பின் ரவீனா திடீரென சுதாரித்தது போல், “இல்லை, இல்லை அது உண்மை இல்லை. மௌன ராகம் சீரீயலுக்கு டிஆர்பி ரேட்டிங் நன்றாகவே இருந்தது. டிஆர்பி குறைந்ததால் இந்த சீரீயலை நிறுத்தவில்லை” என்று கூறினார். எனினும் டிஆர்பி குறைந்ததனால்தான் இந்த சீரியல் நிறுத்தப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன.