Cinema History
சும்மா கொஞ்ச நேரம் வந்து நடிங்க!.. நைசா பேசிய இயக்குனரை நம்பி போய் கார்த்திக் பட்ட பாடு!…
தமிழ் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். முதன் முதலாக 1985 ஆம் ஆண்டு வந்த பகல் நிலவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மணிரத்தினம்.
அதன் பிறகு வரிசையாக பல படங்களை இயக்கினார். பொதுவாக ஆக்ஷன் திரைப்படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்கள் காதல் படங்கள் எடுக்கும்போது அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால் மணிரத்தினம் இரு வகையான திரைப்படங்களையுமே சிறப்பாக இயக்கினார்.
இதையும் படிங்க:‘16 வயதினிலே’ பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.யா? பாரதிராஜா கொடுத்த ஷாக்
அதிலும் நாயகன், தளபதி போன்ற ஆக்ஷன் படங்கள் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை கொண்டு அமைந்திருந்தன. அதே நேரம் ரோஜா, உயிரே போன்ற காதல் படங்களையும் இயக்கினார் மணிரத்தினம். மணிரத்தினம் இயக்கிய திரைப்படத்தில் முக்கியமான திரைப்படம் மெளன ராகம்.
கதாநாயகனை திருமணம் செய்யும் கதாநாயகி மூன்றே நாளில் அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறாள். அதற்கு ஒரு பின்கதை உள்ளது. ஆனால் திருமணம் ஆகி ஒரு வருடம் கழித்தே விவாகரத்து பெற முடியும். அந்த ஒரு வருடத்தில் அவர்களுக்குள் ஏற்படும் காதலை வைத்து படம் செல்லும்.
இதையும் படிங்க:அத சொல்ல முடியல!.. ஓட்டுக்கு பணம் வாங்கதன்னு நீ சொல்றியா?.. விஜயை விளாசிய ராஜன்…
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு சிறிது நேர ப்ளாஸ்பேக் காட்சிகள் மட்டுமே இருந்தன. படத்தின் கதையை முழுதாக கேட்காமலே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார் கார்த்திக். ஆனால் பிறகுதான் படத்தில் கதாநாயகன் அவர் கிடையாது, மோகன் என்பது தெரிந்துள்ளது.
இருந்தாலும் ஒப்பந்தம் செய்துவிட்டதால் நடித்து கொடுத்துள்ளார் கார்த்திக். ஆனால் படம் வெளியான பிறகு மோகனுக்கு நிகராக கார்த்திக்கிற்கும் வரவேற்பு கிடைத்தது. நடிகர் கார்த்திக் இந்த செய்தியை ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:பண்ணை வீட்டில் துணை நடிகைகளுடன் ஜல்சா!.. காமெடி வடிவேலு மாமாக்குட்டி ஆன கதை!…