Connect with us

காதலர் தினத்தை குறிவைக்கும் மௌனம் பேசியதே

latest news

காதலர் தினத்தை குறிவைக்கும் மௌனம் பேசியதே

தமிழகத்தில் இது ரீ ரிலீஸ் காலம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் அடித்த படங்கள் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்துவருவது அதிகரித்து வருகிறது. இந்த லிஸ்டில் சூயாவும் இணைகிறார். கடந்த 2002ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா நடித்த கிளாசிக் படமான மௌனம் பேசியதே , வருகிற பிப்ரவரி 13-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. :

ஏற்கெனவே மௌனம் பேசியதே காதலை மையமாக கொண்ட படமாதலால் காதலர் தினத்தை குறி வைத்து ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.இப்படம் பழைய பதிப்பை விட மேம்படுத்தப்பட்ட 4K தரம் மற்றும் தியேட்டருக்கு ஏற்ற ஒலி அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்திற்கு பின் அடுத்து சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் இது. இதில் “கௌதம்” என்ற கதாபாத்திரத்தில் அவரது அமைதியான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. த்ரிஷா அறிமுகமான முதல் படம் இதுதான். யுவனின் இசையில் “எங்கே போனாய்”, “ஆடாத ஆட்டமெல்லாம்” போன்ற பாடல்கள் இன்றும் இளைஞர்களின் ஃபேவரிட்.
மௌனம் பேசியதே இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில் இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top