Categories: Entertainment News television news

பிக்பாஸில் கலந்து கொள்ளும் ‘மெளன ராகம்’ நடிகை…அப்போ இந்த சீசனோட காதல் பறவை இவங்கதானா?!..

பிரபல தனியார் தொலைகாட்சி நிறுவனமான விஜய் டிவி வருடாவருடம் மக்கள் பொழுது போக்கிற்காக நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். சீசன் 1 முதலே இந்நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் உண்டு. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் அனைவரும் சினிமா மட்டுமில்லாமல் தொலைக்காட்சி பிரபலம், மாடலிங் மற்றும் பல்வேறு துறையில் உள்ளவர்கள். 100 நாட்கள் ஒரே வீட்டில் வெளி உலகத்துடனும் தங்களது குடும்பத்துடனும் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு இருக்கும் பொழுது ஒவ்வொருவரின் உண்மையான குணங்களும் வெளிவரும். போட்டியின் இறுதி வரை யார் தங்களது உண்மையான குணங்களோடு இருக்கிறாரோ அவரே போட்டியில் வென்றவராய் கருதப்படுகிறார். அந்த 100 நாட்களும் அனைவருக்கும் தினமும் குறிப்பிட்ட டாஸ்க்கும் கொடுக்கப்படும். அதையும் அவர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் கையாள வேண்டும்.

இதையும் வாசிங்க: வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்

போட்டியில் வென்றால் மட்டும் போதாது. மக்களின் மனதையும் வென்றவருக்கே பரிசு தொகை. இப்போட்டியில் இது வரை 6 சீசன் நடைபெற்றுள்ளது. இந்த 6 சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 7க்கான ப்ரோமைவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் மக்களிடையே மிகுந்து காணப்படுகிறது.

வருடா வருடம் ஒரு காதல் பறவைகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்புவது வழக்கம். சீசன் 1 முதலே அனைத்து சீசனிலும் காதல் என்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கவின்-லாஸ்லியா, ஓவியா-ஆரவ் என ஒவ்வொரு சீசனிலும் லவ் டிராக் என்பது உண்டு. பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற அமீர் பாவனிக்கு இடையே ஏற்பட்ட நட்பு பின்னாலில் காதலாக மாறியது. இது இன்றுவரை நிலைத்தும் இருக்கிறது.

இதையும் வாசிங்க: கமல் செஞ்சா நானும் செய்யணுமா?!… ஒரு படத்தில் கூட ரஜினி செய்யாத ஒரு விஷயம்…

அதனைபோல் இந்த சீசனில் விஜய் டிவி சீரியலான மெளன ராகம் சீரியலில் நடித்த நடிகை ரவீனா கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் புகைப்படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக் பாஸில் கலந்து கொள்வது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இவரின் குழந்தை தனமான பேச்சு இவரை இந்த வீட்டில் எத்தனை நாள் நீடிக்க வைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இதே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரியும் மாகாபா ஆனந்தும் இப்போட்டியில் பங்கேற்க போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்த போட்டிக்கு வந்தால் இப்போட்டி நன்கு கலகலப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Published by
amutha raja