தமிழ் ரசிகர்களின் பேவரைட் ஹிந்தி நடிகை ரகசிய திருமணம்.... எந்த நடிகை தெரியுமா?

சமீபகாலமாக படங்களைவிட சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் சீரியல்கள் தான் மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தமிழ் சீரியல் என்றில்லாமல் அனைத்து மொழி சீரியல்களையும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் தான் நாகினி. ஹிந்தி சீரியலான இதை தமிழில் டப் செய்து ஒளிபரப்பாகி வந்தார்கள். இச்சாதாரி நாகங்கள் சம்பந்தப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை 5 பாகங்கள் வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இச்சாதாரி நாகினியாக பிரபல பாலிவுட் நடிகை மெளனி ராய் நடித்திருந்தார்.

mouni roy
தனது வசீகரிக்கும் தோற்றத்தால் இந்த சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் மெளனி. இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்காகவே சீரியல் பார்த்த இளைஞர்களும் உண்டு. இந்த சீரியல் மூலம் பிரபலமான மெளனி பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோல்ட் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன் திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் கேஜிஎப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். பின்னர் தொடர்ந்து ரோமியோ அக்பர் வால்டர், மேட் இன் சைனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

mouni roy
இந்நிலையில் நடிகை மௌனி ராய் திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன்படி நேற்று நடிகை மௌனி ராய்க்கு சுராஜ் நம்பியார் என்ற துபாய் தொழிலதிபருடன் கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடைபெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திடீரென நடிகை மெளனி திருமணம் செய்து கொண்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.