இறப்பதற்கு முன்னாடி என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கிய பாலுமகேந்திரா... சீக்ரெட் பகிர்ந்த மௌனிகா...

by Akhilan |
இறப்பதற்கு முன்னாடி என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கிய பாலுமகேந்திரா... சீக்ரெட் பகிர்ந்த மௌனிகா...
X

Balu mahendra & mounica

நடிகை மௌனிகாவிடம் அவரது கணவர் இயக்குனர் பாலுமகேந்திரா இறக்கும் போது இரண்டு சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. இவர் மற்ற இயக்குனர்களை போல இல்லாமல் காமெடி படம் முதல் சீரியஸ் படம் வரை மாஸ் காட்டி இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் வசனகர்த்தாவாக, ஒளிப்பதிவாளராக, தயாரிப்பாளராக என பல துறைகளில் இருந்து இருக்கிறார்.

பாலுமகேந்திரா

Balu mahendra & Akhila

சினிமா வாழ்க்கை இப்படி என்றால் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது. நடிகை ஷோபாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை பல நாட்கள் நீடிக்கவில்லை. நடிகையாக இருந்த ஷோபா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து இவருக்கு அகிலா என்ற ஒரு மனைவி இருக்கிறார். அவருக்கும் பாலுமகேந்திராவிற்கும் திருமணம் ஆகும் போது அவருக்கு 18 வயது மட்டுமே ஆனது. இவருடன் திருமண வாழ்க்கையில் இருக்கும் போது நடிகை மௌனிகாவை திருமணம் செய்தார். இவருக்கும் மௌனிகாவிற்கும் 30 வருடம் வயது வித்தியாசம். குழந்தை பெற்றுக்கொண்டால் அது பாலுமகேந்திராவின் இன்னொரு மனைவி அகிலாவை பாதிக்கும் என்பதால் கடைசி வரை குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார். இவரின் கடைசி காலத்திலும் அவருடன் இருந்தது மௌனிகா தான்.

Balu mahendra & mounica

இந்நிலையில் பாலுமகேந்திரா இறக்கும் போது மௌனிகாவிடம் இரண்டு சத்தியம் வாங்கி இருக்கிறார். அதில், நான் ரியல் எஸ்டேட்டில் வேலை செய்து வந்தேன். ஆனால் பாலுமகேந்திராவிற்கு அது பிடிக்கவில்லை. நான் இறந்தப்பின் உனக்கு பிடித்த இயக்குனர்களுடன் நீ கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனக் கேட்டு இருந்தார். நானும் அதற்கு ஓகே எனக் கூறி சத்தியம் செய்தேன்.

இரண்டாவதாக என்னை திருமணம் செய்யக்கோரினார். ஆனால் அது எனக்கு ஒப்புக்கொள்ளும் மனநிலை இல்லை. இது என்னை இரண்டாவதாக கட்டிக்கொள்ள வருபவருக்கும் பிரச்னையாக இருக்கும். அதனால் திருமணம் காலம் தான் முடிவெடுக்க வேண்டும். அந்த சத்தியம் பண்ண முடியாது. நடிப்பதற்கு மட்டுமே சத்தியம் செய்வேன் என மௌனிகா அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தாராம். இதை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மௌனிகா தெரிவித்து இருக்கிறார்.

Next Story