இயக்குநர் வீட்டில் நடந்த துக்கம்... பிரபலங்கள் இரங்கல்!
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்தவர். தற்போது நடிப்பிலும் கலக்கி வருகிறார்.
படங்களில் குணசித்திரம், வில்லன் என கலந்துகட்டி நடித்து வருகிறார். நாட்டாமை, நட்புக்காக, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் என இவர் இயக்கத்தில் ஏராளமான வெள்ளிவிழா படங்கள் வெளியாகி வசூல் மழை பொழிந்துள்ளன.
இன்றும் சன் டிவியில் சிறந்த டிஆர்பியை இவரின் படையப்பா, முத்து திரைப்படங்கள் தக்க வைத்துள்ளன. குறிப்பாக படையப்பா என்றும் எவர்கிரீன் படமாக இருக்கிறது. இப்படி இயக்கத்திற்கும், நடிப்பிற்கும் பெயர்போன இவரின் வீட்டில் தாங்க முடியாத துக்கம் ஒன்று நடந்துள்ளது. ரவிக்குமாரின் அம்மா ருக்மணி அம்மாள் இறந்து விட்டார் என்பது தான் அது. 88 வயதான ருக்மணி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார் என, அவரே தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கிறார்.
இதையடுத்து பிரபலங்கள் பலரும் ரவிக்குமார் வீட்டிற்கு படையெடுத்து அவரின் அம்மாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் மட்டுமின்றி போனிலும் பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று மதியம் 2.30 மணியளவில் அவரின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புஷ்பா 2 கொடுத்த ஹைப்புக்கு வொர்த்தா?.. படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம் இதோ!..