பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கும் பா.ரஞ்சித்...நியாயம் எல்லாம் சினிமாவில் மட்டும்தானா?....
அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித். அதன்பின் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பேட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இவரின் திரைப்படத்தில் சாதி அரசியல் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை பற்றி அதிகம் பேசுவார். சமீபத்தில் கூட அவரின் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தனது உதவி இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அப்படி அவர் தயாரித்து விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படம்தான் சமுத்திரக்கனி நடித்த ‘ரைட்டர்’ . ஆனால், இப்படம் வசூலை பெறவில்லை. இப்படம் தொடர்பாக ரஞ்சித் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படத்தின் ஓவர்சீஸ் (வெளிநாட்டு உரிமை)யை ஒரு வினியோகஸ்தரிடம் ரஞ்சித் விற்றுள்ளார். வெளிநாட்டு உரிமை என்பது திரையரங்கில் வெளியிடுவது மட்டுமில்லாமால், அங்குள்ள தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி உரிமைகளையும் சேர்த்துதான்.
ஆனால், வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையை மலேசியாவில் உள்ள ஆஸ்ட்ரோ வானவில் என்கிற நிறுவனத்திடம் ரஞ்சித் விற்றுள்ளார். இதனால், முதலில் வெளிநாட்டு உரிமையை விற்ற வினியோகஸ்தருக்கு ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ரஞ்சித்தை தொடர்பு கொண்டு அவர் இதை கூற அந்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன் என அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம் ரஞ்சித். அதனால்தான் ஆஸ்ட்ரோ வானவில் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் ஓடிடிகளில் ரைட்டர் படம் வெளியானது. ஆனால், கூறியபடி அந்த ரூ.15 லட்சத்தை தற்போது வரை அந்த வினியோகஸ்தருக்கு ரஞ்சித் கொடுக்கவில்லையாம்.
திரைப்படங்களில் சமூக கருத்துக்களையும் நியாயங்களையும் பேசும் ரஞ்சித் இப்படி செய்யலாமா என புலம்பி வருகிறாராம் அந்த வினியோகஸ்தர்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் ரிலீஸ்-க்கு முன் இத செஞ்சே ஆகனும்…விக்ரமின் அதிரடியான முடிவு…