Connect with us

Cinema News

தளபதியையே கதறவிட்டாரு… இவரு நமக்கு வேண்டாம்.. யுவனை கழட்டிவிட்ட படக்குழு!…

YuvanShankarRaja: கோட் திரைப்படத்தில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை குவித்த நிலையில் தற்போது யுவனுக்கு போதாத காலம் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது மகனாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் அதன் பின்னர் நடந்ததுதான் பிரம்மாண்டம். தனக்கென ஒரு கூட்டத்தையே உருவாக்கினார். 25 ஆண்டு காலமாக கோலிவுட்டை ஆண்டு வரும் யுவன் இதுவரை 170 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அவங்களுக்கு மட்டும் தனி சட்டமா?… சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்!

1996 ஆம் ஆண்டு அரவிந்தன் திரைப்படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. அதைத்தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வந்தாலும் சரியான வரவேற்பு அமையாமலே இருந்தது. இதைத்தொடர்ந்து 2000 ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் அறிமுக திரைப்படமான தீனா யுவன் சங்கர் ராஜாவிற்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இவருடைய இசையை ரசிக்க தொடங்கியது ரசிகர்கள் அந்த திரைப்படத்திலிருந்து தான். அங்கு தொடங்கிய வெற்றிப் பயணம் தொடர்ச்சியாக அவருக்கு வெற்றி படங்களை கொடுத்து வந்தது. தனுஷின் துள்ளுவதோ இளமை, சூர்யாவின் நந்தா, ஏப்ரல் மாதத்தில் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அதிலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 7ஜி காலனி யுவனின் அடையாளத்தையே கோலிவுட்டில் மாற்றியது.

sardar2

இத்தனை வெற்றி படங்களை கொடுத்த யுவன் சங்கர் ராஜாவிற்கு இது என்னவோ போதாத காலம் தான். கோலிவுட் தளபதி விஜய்யின் கடைசி படங்களில் ஒன்றாக உருவான தி கிரேட்டர்ஸ் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது ரசிகர்களுக்கு இவர் மீது நம்பிக்கை இருந்தது.

இதையும் படிங்க:  நேரா கோர்ட்டுக்குதான் வருவேன்!.. வந்தா என்னை கடத்திடுவாங்க!.. ஜெயம் ரவி உயிருக்கு ஆபத்தா?..

ஆனால் முதல் சிங்கிள் வெளியான போதே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ச்சியாக அவரின் பாடல்கள் ரசிகர்களிடம் விமர்சனத்தையே குதித்தது. நல்ல பாடல்களாக இருந்தாலும் அது விஜய்யின் படத்திற்கு கிடைக்கும் அளவு பெரிய அளவிலான தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

இதனால் யுவன் சங்கர் ராஜாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டு இருக்கிறது. இவர் இசையமைப்பு செய்ய இருந்த சர்தார் 2 திரைப்படத்தில் இவரை கழட்டி விட படக்குழு முடிவு எடுத்திருக்கிறதாம். தளபதிக்கே இந்த நிலைமை நம்மளால எல்லாம் தாங்க முடியாது. வேறு யாராவது இசையமைப்பாளரை பார்த்துக் கொள்ளலாம் எனவும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top