வில்லனா இருந்து ஹீரோவான சரத்குமார்.... ஹீரோ ஆசையில் கோட்டை விட்ட ஆனந்தராஜ்!..
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே ஹீரோவாக நடிக்க துவங்கி இப்போது வரை ஹீரோவாகவே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி இப்போது ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பலரையும் சொல்லலாம். ஆனால், எம்.ஜி.ஆர் காலத்திலேயே காமெடி நடிகராக இருந்த நாகேஷ் மற்றும் சந்திரபாபு ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர்.
அதேபோல், பல நடிகர்கள் வில்லனாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக மாறியுள்ளனர். அதில் சத்தியராஜ் முக்கியமானவர். தொடக்கத்தில் பட படங்களில் வில்லனின் அடியாளாக வந்து ‘யெஸ் பாஸ்’ என்கிற வசனத்தை மட்டுமே பேசினார். கொஞ்சம் புரமோஷன் கிடைத்து கற்பழிப்பு காட்சிகளில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: 10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..
அதன்பின் கடலோர கவிதை உள்ளிட்ட சில படங்கள் மூலம் கதாநாயகனாக நடிக்க துவங்கி பல வருடங்கள் ஹீரோவாக மட்டுமே நடித்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஒரே கட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் ஆனந்தராஜும், சரத்குமாரும்.
சரத்குமார் வினியோகஸ்தர், தயாரிப்பாளராக என துவங்கி பின்னர் வில்லனாக மாறினார். ஒருவர் வாழும் ஆலயம் என்கிற படத்தில்தான் ஆனந்தராஜ் அறிமுகமானார். அப்போதுதான் இரண்டு படங்களை தயாரித்து நஷ்டமடைந்தார் சரத்குமார். புலன் விசாரணை படத்தில் ஒரு புதுமுக வில்லனை படக்குழு தேடிய போது அந்த வாய்ப்பு சரத்குமாருக்கு போனது. அதேபடத்தில் வில்லனின் அடியாளில் ஒருவராகவும் ஆனந்தராஜ் நடித்திருந்தார். இரண்டு பேருமே வில்லன் நடிகராக வளர்ந்தனர்.
இதையும் படிங்க: வில்லன்களே இல்லாமல் சூப்பர் ஹிட் கொடுத்த விஜய்.. அட இத்தனை படங்களா?!…
இயக்குனர் செந்தில்நாதன் இவர்கள் இருவரையும் வைத்து ‘காவல் நிலையம்’ என்கிற படத்தை எடுத்தார். அந்த படம் வெற்றிபெற்றதும் ஆனந்தராஜுக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தது. சில படங்களில் நடித்தார். ஆனால், அவரை ஹீரோவாக மக்கள் ஏற்கவில்லை. எனவே, மீண்டும் வில்லனாக நடிக்க போய்விட்டார். ஆனால், சரத்குமாரை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர்.
இப்போது ஆனந்தராஜ் காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார். சரத்குமார் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துவிட்டு இப்போது மீண்டும் போர்த்தொழில் போன்ற படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரை விட எனக்கு அதான் முக்கியம்!.. வந்த வாய்ப்பை தட்டிக் கழித்த வில்லன் நடிகர்..