சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். தனக்கென ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
எம்.ஜி.ஆர் படம் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்கிற இமேஜை உருவாக்கினார். அவரின் படங்களில் வாள் மற்றும் கத்திச்சண்டை அதகளமாக இருக்கும். அதற்காகவே ஒரு கூட்டம் அவரின் படங்களை பார்க்க போனது. துவக்கத்தில் சரித்திர படங்களில் மட்டுமே நடித்து வந்த எம்.ஜி.ஆர் பின்னர் ஜனரஞ்சகமான படங்களிலும் நடித்து வெற்றி கொடுத்தார்.
இதையும் படிங்க: இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை!.. சிவாஜி சொல்லியும் கேட்காத இயக்குனர்!.. படமோ பிளாப்!..
தனது படங்களில் நல்ல கருத்துக்களை கொண்ட வசனங்கள் மற்றும் காட்சிகளை வைத்தார். மக்களுக்காக போராடும் ஒரு கம்யூனிஸ்ட் போல தனது கதாபாத்திரம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தனது பாடல்களில் அர்த்தமுள்ள, மக்களுக்கு அறிவுரை சொல்வது போன்ற வரிகளை இடம் பெறச்செய்வார்.
எம்.ஜி.ஆர் சரியாக கால்ஷீட் கொடுக்க மாட்டார் என்கிற புகார் அவர் மீது உண்டு. ஆனால், அதற்கு காரணமே தயாரிப்பாளராகத்தான் இருக்கும் என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். மாடி வீட்டு ஏழை படத்தில் எம்.ஜி.ஆர் சரியாக கால்ஷீட் கொடுக்காததால் சந்திரபாபு நஷ்டமடைந்ததாக சொல்வார்கள். ஆனால், சந்திரபாபு செய்த ஒரு விஷயம் பிடிக்காமல்தான் எம்.ஜி.ஆர் அப்படி செய்தார் என்பது பலருக்கும் தெரியாது.
இதையும் படிங்க: என் படத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னது!.. நெகிழும் மைக் மோகன்!…
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டபோது குண்டு அவரின் தொண்டையில் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, ‘எம்.ஜி.ஆர் அவ்வளவுதான். இனிமேல் அவரால் சினிமாவில் நடிக்க முடியாது. அப்படியே நடித்தால் பேச முடியாது’ என சினிமா உலகம் பேசியது. அதோடு, அவருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த சில தயாரிப்பாளர்கள் அதை திருப்பி கேட்டனர்.
ஆனால், ஒரு தயாரிப்பாளர் மருத்துவமனைக்கு சென்று ‘நீங்கள் குணமாகி திரும்பி வருவீர்கள். நான் தயாரிக்கும் 3 படங்களில் நீங்கள்தான் ஹீரோ’ என சொல்லி அங்கேயே அட்வான்ஸும் கொடுத்தார். அவர்தான் தேவர் பிலிம்ஸ் சின்னத்தேவர். எம்.ஜி.ஆர் நன்றி மறவாதவர். தேவர் எப்போது கால்ஷீட் கேட்டாலும் நடித்து கொடுத்தார். எம்.ஜி.ஆரை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை. நம்பாமல் கெட்டவர்கள்தான் அதிகம்.