Categories: latest news

சூப்பர் மூவி.. செம பிளாஷ்பேக்!.. பிளாக்பஸ்டர்.. கேம் சேஞ்சர் பட முதல் விமர்சனம்!…

Game Changer: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள முதல் தெலுங்கு திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியன் 2 பட வேலைகள் நிறுத்தப்பட்டபோது ஷங்கர் இயக்கிய திரைப்படம் இது. திடீரென ஒரு படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் அவரிடம் அப்போது கதை இல்லை.

அப்போதுதான் கார்த்திக் சுப்பாராஜ் தான் எழுதிய ஒரு கதையை ஷங்கரிடம் சொல்லி ‘இதை என்னால் பண்ண முடியாது. உங்களால்தான் இயக்க முடியும்’ என சொல்லி இந்த கதையை ஷங்கரிடம் கொடுத்திருக்கிறார். அப்படி உருவானதுதான் கேம் சேஞ்சர். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிக்க தெலுங்கில் அதிக பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தில் கியரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், நாசர், சமுத்திரக்கனி, அஞ்சலி என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சொந்த வாழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவன் அரசியல்வாதிகளை திட்டம் போட்டு காலி செய்வதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. வழக்கம்போல் அதிக செலவு செய்து இப்படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். இந்த படம் வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது.

பாகுபலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரணின் பேன் இண்டியா படமாக கேம் சேஞ்சர் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படம் பற்றிய முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. புஷ்பா மற்றும் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் இந்த படம் பற்றி பேசியிருக்கிறார்.

கேம் சேஞ்சர் படத்தை சிரஞ்சீவி சாருடன் பார்த்தேன். இந்த படத்திற்கு நான் முதல் விமர்சனத்தை கொடுக்க விரும்புகிறேன். முதல் பாதி அருமை.. இடைவேளை பிளாக்பஸ்டர்.. என்னை நம்புங்கள். இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இந்த படத்தில் ராம் சரண் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ‘ரங்கஸ்தலம்’ படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இப்போது கேம் சேஞ்சர் படத்திற்காக நிச்சயம் அவர் தேசிய விருது வாங்குவார்’ என சொல்லி இருக்கிறார். புஷ்பா 2 ஹிட்டுக்கு பின் சுகுமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago