ஓவர் பில்டப்பு ஆனா இப்படி ஆகிருச்சே… தேவாரா படத்தின் Honest Review!
Devara: ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தேவாரா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைவிமர்சனம் இதோ!..
ரத்னாகிரி என்ற கடலோர கிராமத்தில் தேவாரா (ஜூனியர் என்.டி.ஆர்), பயரா (சைஃப் அலி கான்), ராயப்பா (ஸ்ரீகாந்த்) மற்றும் பலர் கிராமத்தின் உள்ளனர். அவர்கள் முருகா (முரளி சர்மா) எனும் அதிகாரமிக்க நபருக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை கடத்த உதவுகின்றனர்.
தேவாரா இந்த செயல்கள் தப்பாக தெரிவதை கணிக்கிறார். ஆனால் பயரா இதற்குக் கட்டுப்படவில்லை. இதனால் பயரா, தேவாராவை கொலை செய்வதற்குத் திட்டமிடுகிறார். ஒரு கட்டத்தில், தேவாரா காணாமல் போகிறார். பன்னிரண்டு ஆண்டுகள் கடக்கிறது.
ரத்னாகிரியை பயரா நிர்வகிக்கிறார், அவர் இன்னும் தேவாராவை கண்டுபிடித்து கொல்லத் தேடிக்கொண்டு இருக்கிறார். தேவாராவின் மகன் வரா ஒரு சமயத்தில் பயராவுடன் சேர்கிறார். ஏன் வரா பயராவுடன் இணைகிறார்? அவர் தன் தந்தைக்கு எதிராக செல்கிறாரா?
தேவாரா எங்கே இருக்கிறார்? அவர் உயிரோடா? பயரா தேவாராவை கண்டுபிடிக்கிறாரா? என்ற பல கேள்விகள் தான் படமாகிறது. இப்படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் ஆக இருப்பது ஜூனியர் என்டிஆரின் நடிப்புதான். அப்பா தேவாரா, மகன் வரா என இரு வேடங்களிலும் அற்புதமான நடிப்பை கையாண்டு இருக்கிறார்.
கொடூர வில்லனாக சாயிஃப் அலிகான் தன்னுடைய கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார். ஜான்வி கபூர் மிகப்பெரிய படத்தில் முதல் முறையாக நடிப்பதை எங்கும் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். தேவைக்கேற்ப படத்தில் பிரபலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆக்சன் காட்சிகள் சரியான இடத்தில் அமைந்து இருக்கிறது. ஆனால் இப்படம் புதிய கதையாக அமையவில்லை. நிறைய இடங்களில் பார்ப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் திரைக்கதையை கொரட்டல சிவா வலு சேர்த்திருக்க வேண்டியது முக்கியம். தேவையில்லாத பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இரண்டாம் பகுதியில் சாய்ஃப் அலி கானின் கேரக்டரில் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது. மேலும், கிளைமேக்ஸ் அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இப்படத்தின் இயக்குனர் கொரட்டல சிவா சரியாக கதையை எழுதியிருந்தாலும் அதை திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார்.
இப்படத்திற்கு இன்னொரு பிளஸ் ஆக அமைந்திருப்பது அனிருத்தின் இசைதான். பாடல்கள் சரியான இடத்தில் ரசிக்க வைக்கிறது. அதுபோல ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு தன்னுடைய கேமராவை வைத்து பல இடங்களில் இயக்குனரை காப்பாற்றி இருக்கிறார். மொத்தத்தில் தேவாரா சுமார் ரகம் தான்.