மெய் சிலிர்க்க வைக்கிறானா மெய்யழகன்… இதோ honest review!..
Meiyazhagan: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் கதை மெய்யழகன். இந்தப் படம் தஞ்சாவூர் அருகில் இருக்கும் நீடாமங்கலத்திற்கு செல்லும் அருள்மொழி (அரவிந்த் சாமி) என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தொடர்கிறது.
பல வருடங்களாக குடும்ப சண்டைகள் காரணமாக அவர் ஊரிலிருந்து விலகியிருந்தபோது, ஒரு மர்மமான நபரான (கார்த்தி) அவருடன் பாசமாக அத்தான் எனக் கூறி பழக தொடங்குகிறார். ஆனால், அருள்மொழிக்கு அவர் யார் என்ற நியாபகம் இல்லை. தெரியாத நபர் காட்டும் அப்பழுக்கு இல்லாத பாசத்தால் சிலிர்த்து விடுகிறார் அரவிந்த் சாமி.
கதையில் அரவிந்தசாமி மற்றும் கார்த்தி நடிப்பு முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. கார்த்தி உற்சாகமான கிராமவாசியாகவும், அரவிந்த் சாமியின் நிதானமான, கவலை கொண்ட கதாபாத்திரமாகவும் மாறுபட்ட தன்மைகளுடன் படத்தில் ஆழமான உணர்வுகளை காட்டி நடித்திருக்கின்றனர்.
ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தொய்வை சந்திக்கிறது. ஒரு கட்டத்தில் கதையின் போக்கை ரசிகர்களால் எளிதில் கணிக்கும்படி அமைந்து இருக்கிறது. ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சமூக கருத்துக்களை புகுத்துவதால், கதையில் ரசிகர்களால் ஒன்ற முடியாத சூழலாகிறது.
இதற்கிடையிலும், கோவிந்த் வசந்தாவின் இசை படம் முழுவதும் உணர்ச்சிகளுக்கு அழகாக கடத்தி செல்கிறது. மஹேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவும் கிராமத்து அழகைக் காட்சிப்படுத்துவதில் சிறந்துள்ளது. மொத்தத்தில், ஸ்லோவாக நகரும் கதை என்றாலும், ஆழமான திரைக்கதை ரசிக்க விரும்புவோருக்கு மெய்யழகன் படம் நல்ல அனுபவம்தான்.