பெரிசா ஒன்னுமில்ல!.. படத்த காப்பாத்தறது ராம்சரணும், தமனும்தான்!.. என்ன சொல்றாங்க ஃபேன்ஸ்!...

by Murugan |   ( Updated:2025-01-10 06:15:55  )
game changer
X

Game Changer: ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்து நேரடி தெலுங்கு படமாக உருவாகியிருக்கிறது கேம் சேஞ்சர். இந்த படம் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ இந்த படத்தை சுமார் 500 கோடி செலவில் உருவாக்கியிருக்கிறார்.

கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி என்றாலும் ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதேபோல், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதற்கு முன்பே பலரும் பார்த்துவிட்டனர். படம் பார்த்தவர்கள் டிவிட்டரில் படத்தை பற்றி பதிவிட்டு வருகிறார்கள்.


படம் பார்த்த எல்லோருமே பாராட்டுவது இரண்டாம் பாகம் பற்றி மட்டுமே. இரண்டாம் பாகத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சி படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதாகவும், அதில் அப்பண்ணாவாக ராம்சரணும், பார்வதியாக அஞ்சலியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த 20 நிமிட பிளாஷ்பேக் காட்சிதான் படத்தை தாங்கி பிடிப்பதாகவும், தமனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பெரிய பலம் என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருப்பதாக சொல்லி வருகிறார்கள். குறிப்பாக ஷங்கருக்கு இது கம்பேக் திரைப்படம் என்றும் சொல்கிறார்கள்.


ஆனால், சிலரோ இது சாதாரண அரசியல் கமர்ஷியல் படம்தான். ராம் சரணின் நடிப்பாலும், தமனின் பின்னணி இசையாலும் படம் நிற்கிறது. முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளும், காமெடியும் ஒர்க் அவுட் ஆகவில்லை. 2ம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே ஷங்கர் தெரிகிறார். அந்த பிளாஷ்பேக் காட்சி முடிந்ததும் கேம் சேஞ்சர் மீண்டும் ஒரு சாதாரண அரசியல் படமாக மாறுகிறது.

இதற்கு முன் வந்த பல அரசியல் படங்களை போலவேதான் கேம் சேஞ்சரும் இருக்கிறது. பெரிய வித்தியாசமோ, புதுமையான காட்சிகளோ இல்லை. பிளாஷ்பேக் காட்சியில் அப்பண்ணாவாக மட்டுமே ராம் சரண் சிறப்பாக நடித்திருக்கிறார். அதன்பின் வழக்கமான தெலுங்கு பட ஹீரோவாகவே அவர் படம் முழுக்க வருகிறார். ஐ.ஏஸ்.அதிகாரியாக கேக் வாக் போடுகிறார். பாடல் காட்சிகளுக்கு நன்றாக உழைத்திருக்கிறார்கள்.


இந்தியன் 2-வோடு ஒப்பிட்டால் இந்த படம் ஓகேதான். அதேநேரம், ஷங்கருக்கு இப்படம் கம்பேக் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரின் இயக்கம் சுமார்தான். ராம் சரணும், தமனும்தான் படத்தை காப்பாற்றுகிறார்கள் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ஆனால், ராம் சரணின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

Next Story