வேற மாறி விஜய் ஆண்டனி!.. ஹிட் அடிக்குமா ஹிட்லர்?.. திரைப்பட விமர்சனம்!...

Hitler Review: விஜய் ஆண்டனிக்கு கடைசியாக வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்கள் வெற்றி பெறாத நிலையில் நாளை அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் படம் வெளியாகவுள்ளது. படம் எப்படி இருக்கு வாங்க பார்ப்போம்.

மதுரை மாவட்டத்தில் ஒரு மலைப்பகுதியில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வசிக்கும் மக்களின் வாழ்க்கைதான் ஹிட்லர் படத்தின் கதைக்களம். விவசாயம் செய்வது, மலைப்பகுதிகளில் வேலை செய்வது என பிழைப்பு ஓட்டும் மக்கள் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டுமெனில் ஒரு ஆற்றை கடந்தே போக வேண்டும்.

ஆனால், திடீரென ஆற்று வெள்ளம் அதிகமாகி அடிக்கடி பலரும் உயிரிழக்கிறார்கள். அந்த ஆற்றைக் கடக்க அரசு தரப்பில் பாலம் அமைக்கப்படவில்லை. அந்த கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனி இந்த விஷயத்தை கையில் எடுக்கிறார். பாலம் அமைக்கப்படாமல் இருக்கும் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?.. விஜய் ஆண்டனி நினைத்தது நடந்ததா? அந்த ஆற்றில் பாலம் கட்டப்பட்டதா என்பதுதான் படத்தின் கதை.

hitler



வழக்கமாக விஜய் ஆண்டனி படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்காது. ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் அதிகமாகவே அரசியல் பேசியிருக்கிறார்கள். மேலும், இதுவரை விஜய் ஆண்டனி நடித்து வெளியான படங்களில் இருந்து ஹிட்லர் படம் வேறுபடுகிறது.

விஜய் ஆண்டனி புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார். படத்தின் இசை விவேக் - மெர்வின். இசை நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம் என தோன்றுகிறது. படத்திற்கு பெரிய மைனஸாக இருப்பது காதல் காட்சிகள்தான். அது கதையோடும், படத்தோடும் ஒட்டவே இல்லை.

பாடல்களும் சம்பந்தம் இல்லாமல் வருகிறது. உண்மையை சொன்னால் படத்தின் வேகத்தையே பாடல்கள் குறைக்கிறது என்றே சொல்லலாம். மேலும், முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வது பொறுமையை சோதிக்கிறது. காதல் காட்சிகளை பார்க்கும் போது சீரியல் பார்க்கும் ஃபீல் வருவதை தவிர்க்க முடியவில்லை. சில இடங்கள் கிரின்ச்சாகவும் இருக்கிறது.

வழக்கமாக சீரியாஸாக மட்டும் நடிக்கும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் அது வொர்க் அவுட் ஆனாலும், சில இடங்களில் அவரின் நடிப்பு செயற்கையாகவே இருக்கிறது. இயக்குனர் தனா நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும் காதல் காட்சிகளை தவிர்த்திருந்தாலோ, அல்லது சரியாக அமைத்திருந்தாலோ ஹிட்லர் படம் இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும்.

மொத்தத்தில் ஒருமுறை பார்க்கலாம் என்கிற படமாகவே வெளிவந்திருக்கிறது ஹிட்லர்!..

Related Articles
Next Story
Share it