Connect with us

கோடைவிடுமுறையில் ரசித்துப்பார்க்க வேண்டிய குளுகுளு படங்கள் இவை தான்….!

Cinema History

கோடைவிடுமுறையில் ரசித்துப்பார்க்க வேண்டிய குளுகுளு படங்கள் இவை தான்….!

கோடை விடுமுறை விட்டதும் பிள்ளைகள் எங்காவது பெற்றோர் அழைத்துச்செல்ல மாட்டார்களா என்று ஏங்கும். பெரும்பாலான பெற்றோர்கள் சுட்டெரிக்கும் வெயிலைத் தணிக்க ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, கோவா என தங்கள் வசதிக்கேற்ப சுற்றுலா செல்ல ஆரம்பித்து விடுவார்கள். வசதியில்லாத பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை அழைத்துச்சென்று ஊரில் உள்ள தாத்தா பாட்டி வீடுகளில் கொண்டு போய் விட்டு விடுவார்கள்.

அங்கு உள்ள ஆறு, குளம், வயல், தோட்டம், கோவில் திருவிழா என நேரம் போவதே தெரியாமல் போய்விடும். இன்னொரு முக்கியமான பொழுதுபோக்கு என்னவென்றால் அது சினிமா தான். இந்த சினிமாவை பிரித்து பிரித்து பார்த்தால் இன்னும் சுவாரசியம்தான். கோடைக்கேற்ற படங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நாம் முடிந்தளவு குளுகுளு இடங்களைப் பார்க்கத்தான் முடியவில்லை.

குறைந்தபட்சம் திரையிலாவது அதுபோன்ற பகுதிகளைப் பார்த்து விட வேண்டும் அல்லவா? உங்களுக்காக அதுபோன்ற படங்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளோம். அவை எவை எவை என்று பார்க்கலாமா….!

ராவணன்

Ravanan Vikram

2010ல் வெளியான இந்தப்படம் அப்போதைய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்விராஜ், சுகுமாரன், கார்த்திக், பிரபு, பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை ஆறுகளையும், அருவிகளையும், காடுகளையும், மலைகளையும் திரையில் வரவழைத்தது.

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் வெளியானது இந்தப்படம்.

லேசா லேசா

lesa lesa Sham, Trisha

2012ல் வெளியான இந்தப்படம் சிறந்த கோடைச்சித்திரம். கோடைகாலத்தில் பார்க்க வேண்டிய ரம்மியமான படம். அதனால் இனியும் விட்டுவைக்காதீர்கள். இப்போதே பார்த்து விடுங்கள். பிரியதர்சன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியான இந்தப்படம் மென்மையான காதல் திரைப்படம்.
ஷாம், திரிஷா, மாதவன், கொச்சின் ஹனீபா உள்பட பலர் நடித்துள்ளனர். அவள் உலகழகி, லேசா லேசா, முதல் முதலாய், ஏதோ ஒன்று, என்னை போலவே ஆகிய பாடல்கள் உள்ளன.

அலைபாயுதே

மணிரத்னத்தின் மணியான இயக்கத்தில் காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்த படம். காதல் இளம் பருவத்தினரின் மத்தியில் எப்படி அலை பாய்கிறது என்பதை தெளிந்த நீரோடை போல் சொல்லிச் சென்றது.

சகியே….பச்சை நிறமே…பச்சை நிறமே…என்ற பாடலில் நிறங்களுக்கு ஏற்ப சுற்றியுள்ள லொகேஷன்களும் கதாநாயகன்- நாயகியின் ஆடைகளும் இருப்பது கண்களுக்கு குளிர்ச்சி தரும் விருந்து. மாதவன், ஷாலினியின் நடிப்பு அற்புதத்திலும் அற்புதம் என்றே சொல்லலாம். ஜோடிப்பொருத்தமும் செமயாக இருக்கும்.

இதே போல் செப்டம்பர் மாதம் பாடலில்உள்ள லொகேஷனைப் பார்த்தால் அந்தக்கடற்கரையின் அழகு இருக்கே அடேயப்பா என்ன அழகு…! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும்…நமக்கே அந்த இடங்களுக்குப் போக வேண்டும் என்று ஆசை தோன்றும். அதேபோல தான் சினேகிதனே பாடலும்…பார்க்கவும், கேட்கவும் இனிமை தான். என்ன ஒரு ரம்மியமான இசை…இன்னும் 100 ஆண்டுகளானாலும் இந்தப்பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாது என்றே சொல்லலாம்.

எங்க தம்பி

enga thambi Prasanth, Subashini

எஸ்.டி.சபாவின் இயக்கத்தில் ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையில் வெளியான படம் எங்க தம்பி. பிரசாந்த், சுபாஷினி, லட்சுமி, நாகேஷ், நாசர், சின்னி ஜெயந்த், தியாகு, மதன்பாப், குள்ளமணி, வி.எஸ்.ராகவன், ராக்கி ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதம்மா….பாடல் செமயாக இருக்கும். அதில் காட்டப்படும் குளுகுளு காட்சிகள் ரசனைக்குரியவை. அந்த உச்சி மலை, இது மானோடும், மண்ணில் வந்து, மானே மரகதமே, உசுக்கோ ஆகிய சூப்பரான பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

பிரசாந்தின் அற்புதமான நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் குளுகுளு என இருக்கும் மலைப்பிரதேசங்களையும், தேயிலைத்தோட்டங்களையும் ரம்மியமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாடல்களை விட்டு வெளியே செல்ல வேண்டாம். பாடல் எப்போது வரும் என்றே அனைவருக்கும் ஆவல் பிறக்கும்.

மூணாறு

munnar movie

2009ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் தம்பி துரை. பயங்கரமான த்ரில்லர் படம். இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோடை வாசஸ்தலங்களான மூணாறு, கொடைக்கானல், ஊட்டி மற்றும் தேக்கடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தைப் பார்க்கும்போது குளுமையான அனுபவத்தை உணரலாம். ரஞ்சித், பிரேம், ரியாஸ்கான், ரகசியா, ஆர்.சுந்தரராஜன், ரீதிமா ஆகியோர் நடித்துள்ளனர். தேவேந்திரன் இசை அமைத்துள்ளார்.

மேற்கண்ட படங்கள் தவிர ஊட்டி வரை உறவு, கோவா, பாகுபலி, ரோஜா ஆகிய படங்களிலும்; இயற்கை ரசனைக்குரிய இடங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top