Connect with us
danush

Cinema News

மே மாதம் களமிறங்கும் முக்கிய திரைப்படங்கள்!.. டேக் ஆப் ஆகுமா தமிழ் சினிமா?!..

தமிழ் சினிமா மட்டுமல்ல. அனைத்து மொழி பட உலகிலும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. வருட துவக்கத்திலேயே ஒரு படம் வெளியாகி ஹிட் அடித்துவிட்டால் செண்டிமெண்டாக அந்த வருடம் நிறைய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடிக்கும் என நினைப்பார்கள்.

அது போல பல முறை நடந்ததும் உண்டு. அதேபோல், வருடத்தின் துவக்கத்திலேயே வெளியாகும் படங்கள் சரியாக ஓடவில்லை எனில் எப்போது டேக் ஆப் ஆகும் என தயாரிப்பாளர் காத்திருப்பார்கள். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஜனவரி முதல் இப்போது வரை வெளியான எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதையும் படிங்க: தமிழில் அதிக வசூல் செய்த டாப் 20 படங்கள்… நீங்க நினைச்சது இருக்கான்னு பாருங்க!.

அதேநேரம், மலையாள திரையுலகில் மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், ஆடுஜீவிதம், பிரேமலு என 4 படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியை பெற்றது. இதில் 3 படங்கள் 100 கோடி வசூலையும் பெற்றது. ஆனால், தமிழ் சினிமா சோர்ந்து போய் கிடக்கிறது. இந்த வருட துவக்கம் முதல் இப்போது வரை வெளியான எந்த படங்களும் வெற்றியை பெறவில்லை.

ஆனால், பெரிய நடிகர்களின் நிறைய படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. விஜயின் கோட், அஜித்தின் விடாமுயற்சி, விக்ரமின் தங்கலான், கமலின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன் என நிறைய படங்கள் இந்த வருடம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், வருகிற மே மாதம் 3 பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 19 முறை விஜயகாந்துடன் மோதிய சரத்குமார் படங்கள்… ஜெயித்தது யாரு? வாங்க பார்க்கலாம்…

தனுஷின் 50 வயது படம் ராயன். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

Thangalan

அடுத்து, விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வரும் மகாராஜா படமும் மே மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமாக மகாராஜா உருவாகியிருக்கிறது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தங்கலான் படமும் மே மாதம் வெளியாகவுள்ளது.

இந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top