ஜெமினி, முத்துராமன் நடிக்க எம்.ஆர்.ராதாவை ஹீரோவாக்கிய இயக்குனர்!.. கடும் விமர்சனத்தை தாங்கி வெளியான படம்!..

பழம்பெரும் நடிகரான எம்.ஆர். ராதா பெரும்பாலும் வில்லனாகவே அசத்தி மக்கள் மனதை வென்றவர். வில்லனாக நடித்தாலும் நகைச்சுவை மூலம் பல நல்ல நல்ல கருத்துக்களை மூடபழக்கங்களை பற்றி அவ்வப்போது மக்களுக்கு எடுத்துரைப்பவர் நடிகவேள். இவரின் நடிப்பில் வெளியான படம் சித்தி.

1967 ஆம் ஆண்டு வெளியான சித்தி படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியானார் நாட்டியப் பேரோளி பத்மினி. படம் வெளியாவதற்கு முன் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தியது பிரபல பத்திரிக்கை ஒன்று.அதில் இரண்டு பக்க பேப்பரில் ஒரு பக்கம் முழுவதும் எம்.ஆர். ராதாவின் புகைப்படத்தையும் மறுபக்கம் பத்மினியின் புகைப்படத்தையும் அச்சிட்டு படத்தை விளம்பரப்படுத்தியது.

radha1

mr radha

அந்த விளம்பரத்தை பார்த்து விமர்சிக்காதவர்களே இல்லை. கடும் விமர்சனத்திற்கு ஆளானார்கள் எம்.ஆர்.ராதாவும் பத்மினியும். ஏனெனில் மார்கெட்டே இல்லாத எம்.ஆர்.ராதா, ஆளே காணாமல் போன பத்மினி அதற்கும் மேல் இவர்கள் ஜோடியை பார்க்க விரும்பாத ரசிகர்கள் என மாறி மாறி விமர்சனங்களை அள்ளி வீசியது.

இந்த படத்தில் இவர்களுடன் ஜெமினி, முத்துராமன், நாகேஷ் நடிக்க எம்.ஆர்.ராதாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். தன் வீட்டு சூழ்நிலைக்காக ஏற்கெனவே 6 குழந்தைகளுக்கு தகப்பனான எம்.ஆர்.ராதாவை திருமணம் செய்து கொள்ளும் பத்மினி, அந்த குழந்தைகளுக்கு சித்தியாக மாறுகிறாள், அதன் பின் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினை, ராதாவின் முரட்டுத்தனமான குணம் என கதையை நன்றாக கொண்டு போயிருப்பார் படத்தின் இயக்குனரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

radha2

mr radha

இந்த படத்தில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பை பாராட்டவதர்களே இல்லை. அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த செய்தியை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it