கலைவாணரை சுடுறதுக்குத் தான் எம்ஆர்.ராதா துப்பாக்கியே வாங்கினாராம். இதுபற்றி அவரது மகன் ராதாரவி பேட்டி ஒன்றில் நடிகர் ராஜேஷிடம் பல சுவாரசியமான தகவல்களை சொல்கிறார். அப்படி என்ன சொன்னார்னு பார்ப்போமா…
‘கலைவாணர் ஒருமுறை ஏதோ சொன்னதுக்கு உளுந்தூர்பேட்டைல போயி துப்பாக்கி வாங்கிட்டு வந்துட்டாரா?’ன்னு நடிகர் ராஜேஷ் கேட்கிறார். அதற்கு, ராதாரவி பதில் சொல்கிறார்.
இதையும் படிங்க… லட்சத்துக்கே நடிப்பை கொட்டுவாரு… இதுல கோடியா? கருடன் படத்தில் வைரலாகும் சூரியின் சம்பளம்…
கலைவாணரை சுடுறதுக்குத் தான் துப்பாக்கி வாங்கினாரு. அவரே ஓப்பனா சொல்றாரு. ‘கலைவாணரை சுடுறதுக்குத் தான் துப்பாக்கி வாங்கினேன்னு…’ அந்த ஒரு ‘கட்ஸ்’ அவருக்கு உண்டு. அது முடிஞ்சிப் போச்சி. இப்பவும் இருக்காங்க. அவரோட நிறைய சம்பாதிக்கிறவங்க இருக்காங்க. ஆனா அந்த தைரியம் இல்ல.
பர்சனல் லைஃப்ல எப்படி பேசறீயோ அதை சினிமாவிலும், நிஜத்திலும் வாழ்ந்து காட்டுவாரு. அதுக்கு உதாரணம் எம்.ஆர்.ராதா தான். எம்ஜிஆர் தான் சிரிச்சிக்கிட்டே சமாளிப்பாரு. ‘நல்லவன் வாழ்வான்’ படத்துல தான் ரெண்டு பேரும் மோதுறதுல நம்பர் ஒன் பிலிம் என்கிறார் நடிகர் ராஜேஷ்.
1967ல் வெளியான படம் பெற்றால் தான் பிள்ளையா. இந்தப் படத்தைத் தயாரித்தவர் முத்துக்குமரன் பிக்சர்ஸ் அதிபர் வாசு. இந்தப் படத்திற்கு எம்ஆர்.ராதா ரூ.1லட்சம் கொடுத்தாராம். படம் வெளியான பிறகு அதை எம்ஜிஆர் வாங்கித் தருவதாக உறுதி கூறினாராம். அனால் எம்ஜிஆரை வாசுவுடன் சென்று எம்ஆர்.ராதா சந்தித்துள்ளார். அப்போது ஒரு லட்சம் தனக்கு தர வேண்டும் என்று கேட்டாராம்.
இதையும் படிங்க… கருடனா?.. காக்காவா?.. சூரியின் ஹீரோ முயற்சி கை கொடுத்ததா?.. கருடன் பட விமர்சனம் இதோ!..
அதற்குப் பிறகு இருவருக்கும் தகராறு வந்ததாம். உன்னால் எனக்கு நிறைய நஷ்டம் என்று பல பல படங்களில் என்னை நீக்கி விட்டார்கள் என்றும் எம்ஆர்.ராதா கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே போவது போல நடித்துள்ளார்.
பிறகு சட்டென மடியில் மறைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து எம்ஜிஆரை சுட்டார். அந்த உடனே அவர் குனிந்து விட்டதால் குண்டு காது அருகே கன்னத்தில் பாய்ந்ததாம். பிறகு வாசு எம்.ஆர்.ராதாவை பிடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…
Biggboss Tamil:…