Connect with us
mr radha

Cinema History

ரத்தக்கண்ணீர் படம் உருவானபோது எம்.ஆர்.ராதா செய்த அலப்பறை!.. தயாரிப்பாளரை கதறவிட்ட நடிகவேள்…

சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியர் எம்.ஆர்.ராதா. பெரியாரின் திராவிட கொள்கையின் மீது ஆர்வம் கொண்டு பகுத்தறிவு கருத்துக்களை தனது நாடகங்களில் பேசி வந்தவர் இவர். இதற்காக பல எதிர்ப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார். ஆனாலும் பல எதிர்ப்புகளையும் மீறி நாடகங்களை நடத்தியவர் இவர்.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என பல வேடங்களிலிலும் கலக்கி இருக்கிறார். குறிப்பாக குடும்பத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் சகுனி வேலை செய்யும் வேடங்களில் அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர்.

இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட நடித்த எம்.ஆர்.ராதா!.. வாக்கு கொடுத்தா மனுஷன் இப்படி மாறிடுவாராம்!..

எம்.ஆர்.ராதா ஹீரோவாக நடித்து 1954ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ரத்தக் கண்ணீர். இந்த படம் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்த படத்தில் அவர் பேசிய வசனங்கள் இப்போதும் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதலில் நாடகமாகத்தான் இந்த கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். இந்த நாடகத்தை சினிமாவாக நடுக்க பெருமாள் முதலியார் ஆசைப்பட்டார். இயக்குனர் கிருஷ்ணன் – பஞ்சு என முடிவானது. எம்.ஆர்.ராதாவை சந்தித்து இந்த படத்தில் நடிக்க வேண்டும் என அவர்கள் கேட்டபோது எம்.ஆர்.ராதாவுக்கோ பெரிய ஆர்வமில்லை.

எனவே, அப்போது ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய டி.ஆர்.சுந்தராம்பாளை விட அதிகமாக அதாவது, ஒரு லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தால் இப்படத்தில் நடிக்கிறேன் என்றார். அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துக்கொண்டார். ஒரு வருடத்தில் இந்த படத்தை எடுத்து முடிப்பது என முடிவானது. ஆனால், நடிகர், நடிகையர் தேர்வு உள்ளிட்ட பிரி புரடெக்‌ஷன் வேலைக்கே 6 மாதம் ஆகிவிட்டது. மீதமிருந்த 6 மாதத்தில் படத்தை முடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க: கருணாநிதிக்கு எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ பட்டம் கொடுத்தது இப்படித்தான்!.. சுவாரஸ்ய தகவல்..

எனவே, மேலும் சம்பளத்தை சேர்த்துக்கேட்டார் எம்.ஆர்.ராதா. அதிர்ந்து போன தயாரிப்பாளரும் இயக்குனரும் திரையுலகில் பெரிய புள்ளிகளாக இருந்தவர்களிடம் எடுத்தவரை படத்தை போட்டுக்காட்டி எம்,.ஆர்.ராதாவிடம் நீங்கள் சொல்லி இப்படத்தில் நடிக்க சொல்லுங்கள் என சொல்ல படம் பார்த்தவர்களோ ‘இந்த படத்தை நீங்கள் நிறுத்தி விடுவதுதான் நல்லது. எம்.ஆர்.ராதா முகத்தையெல்லாம் ஹீரோவாக யார் பார்ப்பார்கள்’ என சொல்ல தயாரிப்பாளரும், இயக்குனரும் அதிர்ந்து போனார்கள்.

என்னடா இவர்கள் இப்படி சொல்லுகிறார்கள்.. நாம் எம்.ஆர்.ராதாவிடம் போய் பேசுவோம் என முடிவெடுத்த அவர்கள் அவரிடம் சென்று ‘சம்பளத்தை சேர்த்து கேட்காமல் இந்த படத்தில் நடித்து கொடுக்க வேண்டும்’ என வேண்டுகோள் வைக்க அவரும் அதற்கு சம்மதித்து நடித்து கொடுக்க படம் முடிந்து வெளியானது. இப்படி பல சிக்கல்களை சந்தித்த இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top