தீராத வயிற்றுவலியால் துடித்த எம்.ஆர்.ராதா!.. தக்க சமயத்தில் காப்பாற்றிய நடிகர்!..

by Rohini |   ( Updated:2023-04-01 22:24:18  )
radha
X

radha

தமிழ் சினிமாவில் நாடகத்தின் மீதும் சினிமாவின் மீதும் அதிக மோகம் கொண்டவராக
திகழ்ந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. மனதில் பட்டதை எந்த தயக்கமும் இல்லாமல் பொது இடங்களில் வெளிப்படையாக பேசக்கூடிய நடிகராக எம்.ஆர்.ராதா விளங்கினார்.

வாழ்க்கை முழுவதும் தான் பின்பற்றிய கொள்கையுடனேயே வாழ்ந்தவர். மற்ற நடிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது மாறியான மனப்பான்மையுடன் இருந்தார். யாருக்கும் கட்டுப்படாமல் தான் பின்பற்றிய கருத்துக்களுடன் இருந்து வந்தார். கனத்த குரலுக்கு சொந்தக்காரராக விளங்கினார்.

இருந்தாலும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு, சினிமா மீது அவர் கொண்ட அக்கறை காரணத்தால் அவரை மக்களால் புறக்கணிக்கவும் முடியாமல் இருந்தது. நாடகத்துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்து வந்தார். நாடகத்தின் மீது அவர் கொண்ட காதல் அலாதியானது.

அப்படித்தான் ஒருசமயம் சேலத்தில் நாடகத்தை நடத்தி விட்டு தன் நாடகக்குழுவோடு பெங்களூர் புறப்பட்டு சென்றார் ராதா. அவரது நாடகக் கம்பெனியானாலும் அவரின் மகனான எம்.ஆர்.ஆர்.வாசு அந்த அதிகாரத்தை எடுக்கவில்லை. தன் அப்பா நாடகக்குழுவாக இருந்தாலும் அதில் சின்ன சின்ன வேடங்களில் தான் நடித்து வந்தார்.

அந்த நேரத்தில் பெங்களூரில் நடைபெற இருந்த ராமாயண நாடகத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார் ராதா. அப்போது அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவரால் அந்த நாடகத்திலும் நடிக்க முடியாத நிலை. அந்த நேரத்தில் அவரது மகனான எம்.ஆர்.ஆர்.வாசு வந்து ராதாவிடம் தான் வேண்டுமென்றால் நடிக்கட்டுமா? என்று கேட்டார்.

உடனே ராதா வாசுவை சிறிது நேரம் பார்த்து விட்டு நாடக மேடையில் ஏறினார். ஏறியதும் கூடியிருந்த மக்கள் முன்பு ‘என்னால் இன்று என் உடல் நிலை காரணமாக நடிக்க முடியாது, அதற்கு பதிலாக என் மகன் நடிப்பார், விருப்பம் இருந்தால் பாருங்கள், இல்லையென்றால் உங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு திரும்பி விடுங்கள்’ என்ற ஒரு நாகரீகமான அறிக்கையை வெளியிட்டார்.

அதையும் மீறி மக்கள் அமர்ந்திருந்து நாடகத்தை பார்க்க வாசுவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். கூடவே ராதாவும் வாசுவின் நடிப்பை மனதார பாராட்டினார். இதன் காரணமாகவே எம்.ஆர்.ஆர்.வாசு திரைப்பயணத்தில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது.

Next Story