“துப்பாக்கியால சுட்டு யாருமே சாகல… லைசன்ஸ் ஒன்னுதான் குறைச்சலா??”… ரணகளத்துலயும் கூலா பதில் சொன்ன நடிகவேள்…
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த எம்.ஆர்.ராதா, 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி தயாரிப்பாளர் வாசு என்பவருடன், தான் தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை குறித்து பேசுவதற்காக எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே எம்.ஜி.ஆரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தனது துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரின் கழுத்தில் இரண்டு முறை சுட்டார் எம்.ஆர்.ராதா.
அதன் பின் அந்த துப்பாக்கியை கொண்டு எம்.ஆர்.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சையின் மூலம் இருவருமே உயிர் பிழைத்து மீண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. எம்.ஆர்.ராதா வெளிப்படையாகவே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பின் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள்ன்னு பெயர் வந்தது எப்படி தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…
இதனிடையே நீதிமன்ற விசாரணையின்போது நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்திய விழா ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது, நீதிமன்றத்தில் எம்.ஆர்.ராதாவிடம் நீதிபதி “எம்.ஜி.ராமச்சந்திரனை சுட்டீங்களே, அந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா?” என கேட்டாராம். அதற்கு பதிலளித்த எம்.ஆர்.ராதா “ஐயா, அந்த துப்பாக்கியால சுட்ட ராமச்சந்திரன் உயிரோடத்தான் இருக்கிறார். அந்த துப்பாக்கியை வச்சி நானும் என்னை சுட்டுக்கிட்டேன். ஆனா நானும் உயிரோடத்தான் இருக்கேன். இப்படி சுட்டும் யாரையுமே சாகடிக்காத அந்த துப்பாக்கிக்கு எதுக்குங்க லைசன்ஸ்” என்று மிகவும் நகைச்சுவை தொனியோடு கூறினாராம்.