யாருக்கும் தெரியாத எம்.ஆர்.ராதாவை பற்றிய ஒரு ரகசியம்! எம்ஜிஆரையே மிரள வைத்த நடிகவேள்
Actor MR Radha: தமிழ் சினிமாவில் மும்மூர்த்திகள் என எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூவரை குறிப்பிடுகிறோம். ஆனால் இவர்களுடன் நடிகவேள் எம் ஆர் ராதாவையும் இணைத்துக் கொள்ளலாம். நடிப்பிற்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் எம் ஆர் ராதா என்றே சொல்லலாம். சிவாஜியையே ஒரு கட்டத்தில் மிரள வைத்தவர் நம் நடிகவேள்.
அந்த காலத்தில் ஏன் இன்றைய காலகட்டத்தில் கூட இவர் அளவுக்கு ஒரு தைரியமான நடிகரை நாம் பார்க்கவே முடியாது. எதையும் மனதிற்குள் வைக்காமல் மிகவும் தைரியமாக சொல்லக்கூடியவர். பேச கூடியவர் எம் ஆர் ராதா. பகுத்தறிவோடு நிஜ வாழ்க்கையில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை தன் படங்களின் மூலமும் எடுத்துக் கூறியவர்.
இதையும் படிங்க: ரஜினி கொடுத்த காசை நயன்தாரா படத்தில் போட்டு போண்டி ஆன நபர்!.. அப்செட்டில் சூப்பர்ஸ்டார்!..
பெரியாரை தன் கடவுளாகவே பாவித்தவர் எம் ஆர் ராதா. அதனால் பெரியாரின் கொள்கைகளை நாள்தோறும் பின்பற்றியவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் படங்களில் பட்டை விபூதி அடித்து அதை எப்படி மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதை நாசுக்காக சொன்னவர். எம்ஜிஆர்,சிவாஜி இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் .
எம்ஜிஆர் - எம் ஆர் ராதா மோதும் காட்சிகளை இப்போது நாம் பார்க்கும் போது இருவருடைய அந்த வசனங்கள் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற அளவுக்கு இருக்கும். படங்களில் வரும் வசனங்களில் இருவருடைய கருத்துக்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர், எம் .ஆர் ராதாவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கவுண்டரை அடித்துக் கொண்டே இருப்பார். அது இப்போது பார்க்கும்போது ரசிக்கும் வகையில் இருக்கும்.
இதையும் படிங்க: அட இருங்கப்பா… அவங்களாம் பாவம் இல்லையா… கில்லி ரீரிலீஸின் மொத்த வசூலால் அதிரும் கோலிவுட்….
இந்த நிலையில் எம் ஆர் ராதாவை பற்றி எப்போதும் எம்ஜிஆர் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் இருக்கிறது என்பதை சமீபத்திய ஒரு பேட்டியில் ராதாரவி கூறி இருக்கிறார். அது என்னவென்றால் எம் ஆர் ராதாவுக்கு கார் மெக்கானிசம் நன்கு தெரியுமாம். ஆனால் அதை எப்படி கற்றார் எந்த வயதில் கற்றார் என யாருக்குமே தெரியாதாம். ஏனெனில் சிறு வயதிலேயே அவர் வீட்டை விட்டு ஓடி விட்டார். இருந்தாலும் ஒரு ஜீனியஸ் லெவலுக்கு கார் மெக்கானிசத்தை கற்றவராம் எம் ஆர் ராதா. இதை எப்போதுமே எம்ஜிஆர் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருப்பாராம்.