சம்பள பாக்கியை வாங்க எம்.ஆர்.ராதா செய்த வேலை!...அட இது வேற லெவல்!...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற படத்திற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகவேள் எம்.ராதாவிற்கு சம்பள பாக்கியை 20000 ரூபாயை பாக்கியாக வைத்திருந்தாராம். இன்னொரு விஷயம் என்னவென்றால் தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளபாக்கியை ஒரு கஷ்டப்படுகிற தயாரிப்பாளர் கொடுக்க தாமதப்படுத்தினால் என்றால் அதை விட்டுக் கொடுத்துவிடுவாராம் நடிகவேள்.
இதே அந்த தயாரிப்பாளர் வசதி படைத்தவராக இருந்து பாக்கி வைத்து ஏமாற்றுபவராக இருந்தால் அவரிடம் அந்த பணத்தை வசூலிக்கும் முறையே வித்தியாசமானதாக இருக்குமாம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் இந்த படத்திற்கும் நடந்துள்ளது. இந்த படத்தின் படப்பிற்கு வராமல் இருந்தாராம் எம்.ஆர்.ராதா.
தயாரிப்பு நிர்வாகி அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய ஒப்பனை உதவியாளர் கஜபதியிடம் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி அனுப்பி விடு என்று சொல்ல கஜபதியும் அவ்வாறே சொல்லியிருக்கிறார். அந்த நிர்வாகி தயாரிப்பாளரிடம் போய் சொல்ல அவருக்கு இதுதான் பிரச்சினையாக இருக்கும் என 20000 ரூபாயை எடுத்துக் கொண்டு ராதா வீட்டிற்கு சென்றாராம்.
இவர்களை பார்த்து கஜபதி ராதாவிடம் சொல்ல 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல் என சொல்ல சொல்லி 10 நிமிடம் கழித்து கீழே வந்தாராம். அவரை பார்த்து கஜபதி ஆச்சரியத்தில் திகைத்தாராம். மார்பு முழுவதும் கட்டு போட்டுக் கொண்டு வந்து நான் படப்பிடிப்பிற்கு தான் கிளம்பிக்கொண்டு இருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள் என கூறினாராம்.
தயாரிப்பாளரும் இந்த நிலைமையில் எப்படி என கேட்க இல்லை இல்லை நான் முடித்துக் கொடுத்தே வருகிறேன் என சொல்லி அவர்கள் கொண்டு வந்த 20000 ரூபாயையும் பெற்றுக் கொண்டு காரில் ஏறினாராம். ஏறியவர் கஜபதியிடம் ஏம்ப்பா கஜபதி ஒரே பணத்திற்காக எவ்வளவு தான் நடிக்க வேண்டியிருக்கிறது? படத்துலயும் நடிக்க வேண்டியிருக்கு, படத்திற்காக கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கும் நடிக்க வேண்டியிருக்கிறது என சொல்லி சிரித்தாராம் எம். ஆர். ராதா. பலே கில்லாடியாத்தான் இருப்பாரு போல.